பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் அரசு பள்ளிகள் முன்னேற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் அரசு பள்ளிகள் முன்னேற்றம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: பிளஸ் 2 பொதுத்தேர்வில், தர்மபுரி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம், உயர்ந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், 93 அரசு பள்ளிகள் உட்பட, 154 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலரும், அரசு பள்ளியில் கற்பித்தல் மீது நம்பிக்கையின்றி, தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில், அரசு பள்ளியில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, நடப்பாண்டில் பயிற்சி திட்டத்தை அரசு கொண்டு வந்தது. இதனால், மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொண்டனர். நேற்று முன்தினம் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், அரசு பள்ளி மாணவர்கள், 89.19 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இது, கடந்தாண்டை விட, .49 சதவீதம் அதிகரித்துள்ளது. 'அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் குழந்தைகளை, அரசு பள்ளியில் சேர்க்க, கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், மாணவர்களின் கல்வி மீது, ஆசிரியர்களுக்கு கூடுதல் கவனம் ஏற்படும். அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், 100 சதவீதத்தை எட்டும்' என, கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X