சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம்: ஏராளமான பெண்கள் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம்: ஏராளமான பெண்கள் பங்கேற்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது குறித்த இரண்டு நாள் சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. இதில், மாநில மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் முகாமை துவக்கி வைத்து பேசுகையில், ''ஒவ்வொரு பள்ளியிலும், மாணவியருக்கு ஆலோசனை மையம் அமைக்க வேண்டும். தேர்வுகளில் மதிப்பெண் குறைந்தால், மாணவியரை திட்டாமல், அவர்களை ஊக்குவிக்க வேண்டும். குழந்தை திருமணத்தை ஒழிக்க வேண்டும்,'' என்று பேசினார். மகளிர் ஆணைய குழு உறுப்பினர்கள் உமா மகேஷ்வரி, ஜீலியட்செல்வி, விஜயலட்சுமிராமமூர்த்தி ஆகியோர், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது குறித்து பயிற்சி அளித்தனர். பள்ளி கல்லூரி மாணவியர், சமூக விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர் நல அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X