பிக்-அப் வேன் மோதி சிறுமி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிக்-அப் வேன் மோதி சிறுமி பலி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே, பிக் - அப் வேன் மோதி, பைக்கில் அமர்ந்திருந்த, நான்கு வயது பள்ளி சிறுமி பரிதாபமாக இறந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, சோனாரஹள்ளியை சேர்ந்தவர் மேகநாதன், 37, ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகள்கள் லஷிகா, 6, கயல்விழி, 4, மத்தூரில் உள்ள, தனியார் பள்ளியில் முறையே இரண்டாம் வகுப்பு மற்றும் எல்.கே.ஜி., படித்து வருகின்றனர். ஓட்டலுக்கு வந்த சிறுமிகளை, அதே ஊரை சேர்ந்த அரவிந்த், 22 என்பவர், ஸ்பிளண்டர் பைக்கில், நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது, ஊத்தங்கரையில் இருந்து, பெங்களூரு நோக்கி, பூக்கள் ஏற்றி வந்த, பிக் - அப் வேன் சாலையோரம் நின்றுகொண்டிருந்த பைக் மீது மோதியது. இதில், மூவரும் காயமடைந்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கயல்விழி, நேற்று இறந்தார். புகாரின்படி, மத்தூர் போலீசார், ஊத்தங்கரை அடுத்த மகனூர்பட்டி முசிலிகொட்டாயை சேர்ந்த வேன் டிரைவர் விக்னேஷை, 26 கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை