மனைவியை கொலை: கணவனுக்கு ஆயுள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை கொலை: கணவனுக்கு ஆயுள்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: காதல் மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த, பி.அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா,30, கட்டட மேஸ்திரி. இவரும், அதே பகுதியை சேர்ந்த சாரதா,22, என்பவரும் காதலித்து, கடந்த, 2010ல் திருமணம் செய்து கொண்டனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான சிவா, சியாமளாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். கடந்த, 2014, நவ., 9ல், நடந்த தகராறால் ஆத்திரமடைந்த சிவா, ஊதுகுழலால் தாக்கியதில், சியாமளா மயங்கினார். அவரை, தூக்கில் தொங்க விட்டு, கொலை செய்துள்ளார். இந்த வழக்கு, கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அன்புசெல்வி, காதல் மனைவியை கொன்ற சிவாவுக்கு, ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, அவர், வேலூர் மத்திய சிறை அடைக்கப்பட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை