புகார் பெட்டி - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சுகாதார சீர்கேடால் அவதி: குமாரபாளையம் தம்மண்ணன் சாலை, நடன விநாயகர் கோவில் மண்டப வீதியின் நுழைவுப்பகுதியில், சாக்கடை அடைபட்டு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றமும் வீசுகிறது. அருகில் கோவில், குடியிருப்பு பகுதிகள் உள்ளதால், பக்தர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கொசுத் தொல்லை அதிகரித்து, தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளது. சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும்.

- ஆ.கண்ணன், குமாரபாளையம்.

சாலையை சீரமைக்க வேண்டும்: பள்ளிபாளையம் அடுத்த, காவேரி பஸ் நிறுத்தத்தில் இருந்து, ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில், மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஏராளமான பயணிகள், இப்பகுதி மக்கள், இவ்வழியே சென்று வருகின்றனர். விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வி.எம்.ஆறுமுகம், காவேரி.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை