சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு தினம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு தினம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: கோனூர், ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தேசிய டெங்கு தினம் நடந்தது. எர்ணாபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், கோனூர் ஆரம்பு சுகாதார நிலையத்தின் சார்பில், தேசிய டெங்கு தினம் அனுசரிக்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். டாக்டர் ஜெயக்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் ஆகியோர் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதித்தனர். மேலும், டெங்கு புழு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 'காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும்' என, அறுவுறுத்தப்பட்டது. அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் திரளான மக்கள் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை