அ.தி.மு.க., பிரமுகர் கொலை: இருவருக்கு 'குண்டாஸ்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பிரமுகர் கொலை: இருவருக்கு 'குண்டாஸ்'

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: மாவட்டத்தில், நேற்று நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சேந்தமங்கலம் அடுத்த மலைவேப்பன்குட்டை, வெட்டுக்காட்டைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், ஜெ., பேரவை ஒன்றிய செயலராக இருந்தார். கடந்த, மார்ச், 20ல் வீட்டிற்கு செல்லும் வழியில், வெட்டி கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக மலைவேப்பன்குட்டை விமல்குமார், 28; வெட்டுக்காடு சிவக்குமார், 44, ஆகியோரை போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், எஸ்.பி., அருளரசு பரிந்துரைப்படி, இருவர் மீதும், குண்டர் தடுப்புச் சட்டத்தில், நடவடிக்கை எடுக்க, கலெக்டர் ஆசியாமரியம் உத்தரவிட்டார். * ராசிபுரம் தாலுகா, முள்ளுக்குறிச்சி அடுத்த, ஊனாந்தாங்கலில், கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக, சதீஷ்குமார், 23, முருகேசன், 26, ஆகியோரை, கடந்த, 5ல் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும், எஸ்.பி., பரிந்துரைப்படி, குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து, கலெக்டர் ஆசியாமரியம் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும், சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை