பள்ளி வாகனங்கள் 2ம் கட்ட ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வாகனங்கள் 2ம் கட்ட ஆய்வு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: ப.வேலூர் தாலுகாவில், இயக்கப்பட்டுவரும், 254 பள்ளி வாகனங்களில், முதற்கட்டமாக, 136 வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கும் முகாம், கடந்த, 10ல் நடந்தது. இரண்டாம் கட்டமாக, நேற்று, நல்லூர் கந்தம்பாளையம், எஸ்.கே.வி பள்ளியில், 126 வாகனங்களுக்கான ஆய்வு நடந்தது. மாவட்ட (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி தலைமை வகித்தார். குமார் மற்றும் நித்யா உள்ளிட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்தனர். தீயணைப்பு கருவிகள், அவசரகால வழிக்கான கதவு, குழந்தைகள் ஏறி இறங்கும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ள விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 11 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டியவை என, கண்டறியப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது. டி.எஸ்.பி., (பொ) சண்முகம் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X