தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், நாமக்கல் சுகாதார மாவட்ட கிளை சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தது. மாவட்ட துணைத்தலைவர் மோகன் தலைமை வகித்தார். தலைவர் ரங்கசாமி, துணைச்செயலர் மகேஷ்குமார் ஆகியோர் பேசினர். நடப்பாண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கையில், அரசு மருத்துவர்கள் பயன்பெறும் வகையில், தகுதித்தேர்வில் சிறப்பு மதிப்பெண் வழங்க வேண்டும். நிரந்தர தீர்வாக, அரசு மருத்துவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும். 'நீட்' தேர்விலிருந்து, தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவிற்கு, ஜனாதிபதியின் ஒப்புதலை பெற, மாநில அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், நிர்வாகப்படி, பிற ஊதியப்படிகளை வழங்கவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் வேண்டும். மாநில, மாவட்ட அளவில் உள்ள துறை ரீதியான மருத்துவ அலுவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை