புகார் பெட்டி - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேகத்தை கட்டுப்படுத்த தடுப்புச்சுவர் தேவை: குளித்தலை பகுதியில் உள்ள, கரூர் -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. பெயரளவில் தேசிய நெடுஞ்சாலையாக இருந்து வருகிறது. போலீசார், தடுப்பு பேரிகார்ட் வைத்தாலும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலை துறை மூலம், மாயனூரில் இருந்து திருச்சி மாவட்டம் முக்கொம்பு வரை உள்ள சாலையின் நடுவில், தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

- அ. அண்ணாதுரை, மேட்டு மருதூர்.

வங்கியில் கட்டணம் செலுத்த வேண்டும்: குளித்தலை பகுதியில், 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளன. கட்டணம் விதிமுறைப்படி வசூலிக்கப்படுவதில்லை. அரசு அறிவித்த கல்வி கட்டணத்தை, மாணவர்கள் அனைவரும் கல்வி நிறுவனத்தின் பெயரில் உள்ள, வங்கி கணக்கில் பணம் செலுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் முறையான கணக்கு தெரியவரும். அரசு விதிமுறைகளும் நடை முறைப்படுத்தப்படும்.

- ஆர். ராஜீ, குளித்தலை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை