ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி: மரங்களை அகற்றும் பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி: மரங்களை அகற்றும் பணி தீவிரம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: வரும், 30ல், மாரியம்மன் கோவில் கம்பம், ஆற்றில் விடும் விழாவை முன்னிட்டு, அமராவதி ஆற்றில் முளைத்துள்ள மரங்களை அகற்றும் பணி துவங்கியுள்ளது. கரூர், ஜவஹர் பஜார் மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள கோவில் கம்பத்தை எடுத்துச் சென்று, ஆற்றில் விடும் விழா நடக்கும். சில ஆண்டுகளாக ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையில், கம்பத்தை ஆற்றுக்கு எடுத்துச் சென்று, பூஜை செய்து, ஆற்றில் விடுகின்றனர். கம்பம் விடும் இடத்தில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இவைகளை அகற்றும் பணி, நகராட்சி சார்பில் நேற்று துவங்கியது. அதே போல், ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையில், பக்தர்கள் வசதிக்காக தற்காலிகமாக குழாய்கள் அமைக்கப்படுகின்றன. பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திய பின் குளிப்பதற்கும், அதன் பின், அக்னி சட்டி, பால்குடம், அலகு குத்துவதற்காகவும், குழாய் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. பொக்லைன் இயந்திரம் மூலம், அமராவதி ஆற்றில் சுத்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை