அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மழை நீரால் பாதிப்பு; சாலை சரியாகுமா: கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள, கோடங்கிப்பட்டி கிராமத்திலிருந்து, அய்யர்மலை பகுதி செல்லும் சாலையில், பல இடங்களில் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. சாலை வழியாக, வாகனங்களில் மக்கள் செல்லும் போது திணறுகின்றனர். மழை காலத்தில், குழிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால், வாகனங்களில் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த சாலையில், செம்மண் கொட்டி சாலை பராமரிப்பு செய்தால், வாகனங்கள் சிரமமின்றி செல்லும்.
நீர்வால்வு தொட்டி சரி செய்யப்படுமா: சிந்தலவாடி, காவிரி ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் மூலம் சிந்தலவாடி பகுதியில் இருந்து, மதுரை வரை கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் வழியாக, தண்ணீர் செல்கிறது. தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல, தடுப்பு நீர் வால்வு அமைக்கப்பட்டு அதை சுற்றியும், பாதுகாப்பிற்கு தடுப்புச்சுவர் கட்டடப்பட்டுள்ளது. இதன் மூலம், நீர் வால்வு தொட்டி பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு, மழை நீரால் தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளது.

வாய்க்காலில் மரம் அகற்றப்படுமா: கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள, பிள்ளபாளையம் கிராமம் வழியாக, கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. வாய்க்கால் கரையில், பல மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் வீசிய சூறாவளி காற்றால், பழமையான மரங்கள் சில இடங்களில் விழுந்துள்ளன. இந்த மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன. விழுந்த மரங்களால், தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டு கரைகள் சேதமடைய வாய்ப்புள்ளது.

பள்ளி மேற்கூரையில் மரக்கிளை: கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள, மேட்டுப்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி கட்டடம் மிகவும் பழமையானது. கட்டடத்தின் மேற்புற பகுதியில் உள்ள ஓடுகள் மீது, அருகில் உள்ள மரத்தின் கிளைகள் விழுந்துள்ளன. மழை காலத்தில், ஓடுகள் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ந்து வரும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.

படித்துறை சேதம்; மக்கள் அவதி: கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள, பிள்ளபாளையம் அருகில், கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. வாய்க்கால் கரையில், மக்கள் பயன்பாட்டிற்கு படித்துறை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், வாய்க்காலில் தண்ணீர் வரும் போது மக்கள் குளித்து வந்தனர். தற்போது, படித்துறை படிகள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால், வாய்க்காலில் தண்ணீர் செல்லும் போது மக்கள் குளிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை