குளித்தலை, கடவூரில் இன்று ஜமாபந்தி தொடக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குளித்தலை, கடவூரில் இன்று ஜமாபந்தி தொடக்கம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: குளித்தலை, கடவூர் தாலுகா அலுவலகங்களில் இன்று, ஜமாபந்தி தொடங்கப்படுகிறது. இது குறித்து கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: குளித்தலை தாலுகாவில் தோகைமலை, நங்கவரம், குளித்தலை என, மூன்று வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு காலை, 10:00 மணியளவில் தோகைமலை வட்டத்தில் உள்ள புத்தூர், கள்ளை, கூடலூர், கழுகூர், பொருந்தலூர், நாகனூர், தோகைமலை, பாதிரிப்பட்டி, பில்லூர், வடசேரி, கல்லடை கிராமங்களை சேர்ந்த பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுகின்றன. மேலும், வரும், 22, 24 ஆகிய தேதிகளில், நங்கவரம் குறுவட்டம் பகுதி கிராமங்களுக்கும், 25, 26ல் குளித்தலை கிராமங்களை சேர்ந்த, பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுகின்றன. கடவூர் தாலுகா அலுவலகத்தில் இன்று காலை, 10:00 மணியளவில் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் கடவூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட, கிராம மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை