ஈரோடு, புளியம்பட்டி சந்தைகளில் ரூ. 3 கோடிக்கு மாடுகள் விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு, புளியம்பட்டி சந்தைகளில் ரூ. 3 கோடிக்கு மாடுகள் விற்பனை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஈரோடு: ஈரோடு, புன்செய்புளியம்பட்டி மாட்டுச் சந்தைகளில், மூன்று கோடி ரூபாய்க்கு, கால்நடைகள் விற்பனையாகின.
ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை, நேற்று நடந்தது. வழக்கமாக, 1,000 மாடுகளுக்கு மேல் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் ஏப்., கடைசி வரை, குறைந்த எண்ணிக்கையிலேயே கொண்டு வரப்பட்டன. இந்நியில் ஏப்., மாத இறுதி முதல், பெரும்பாலான பகுதிகளில், பரவலாக மழை பெய்தது. இதனால் வறட்சி குறைந்து, புல், செடிகள் வளரத்துவங்கின. மாடு விற்பதை, விவசாயிகளும், மாடு வளர்ப்போரும், தள்ளிப் போட்டுள்ளனர். இதனால் கால்நடைகள் கொண்டு வரப்படுவது தொடர்ந்து சரிந்துள்ளது. நேற்று, 200 கன்றுகள் வந்தன. 1,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றன. 350 எருமைகள், 12 ஆயிரம் ரூபாய் முதல், 38 ஆயிரம் ரூபாய்; 300க்கும் மேற்பட்ட பசுக்கள், 12 ஆயிரம் ரூபாய் முதல், 32 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடந்ததாக, மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறினார்.


* ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி மாட்டுச்சந்தைக்கு கொண்டு வரப்பட்ட, கால்நடைகளின் எண்ணிக்கை, நேற்று வெகுவாக குறைந்தது. கறுப்பு வெள்ளை மாடு, 23 ஆயிரம் ரூபாய் முதல், 52 ஆயிரம் ரூபாய்; ஜெர்சி, 18 ஆயிரம் ரூபாய் முதல், 45 ஆயிரம் ரூபாய்; சிந்து, 18 ஆயிரம் ரூபாய் முதல், 40 ஆயிரம் ரூபாய், நாட்டுமாடு, 43 ஆயிரம் ரூபாய் முதல், 75 ஆயிரம் ரூபாய்; எருமை, 20 ஆயிரம் ரூபாய் முதல், 35 ஆயிரம் ரூபாய்; வளர்ப்பு கன்றுகள், 2,000 முதல், 7,000 ரூபாய் வரை ஏலம் போனது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: கடந்த வாரத்தை ஒப்பிகையில், 450 மாடுகள் குறைந்து விட்டன. வரத்து குறைந்தாலும், விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. மாடுகளின் விலை, 1,000 ரூபாய் வரை அதிகரித்தது. மொத்தம், ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X