இ-நாம் திட்டத்தில் உரிமம்: விவசாயிகளுக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இ-நாம் திட்டத்தில் உரிமம்: விவசாயிகளுக்கு அழைப்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: இ-நாம் திட்டத்தில் உரிமம் பெற, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஈரோடு விற்பனை குழு சார்பில், 'ஒன்றுபட்ட ஒற்றை உரிமம்' (யுனிபைடு சிங்கிள் லைசென்ஸ்) பெறுவது தொடர்பான, வணிகர் கலந்தாய்வு கூட்டம், ஈரோடு மாவட்டம், பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நடந்தது.
இதில் விற்பனை கூட கண்காணிப்பாளர் குமரேசன், சீனிவாசன் பேசியதாவது: தமிழகம் முழுவதிலும் உள்ள, ஒழுங்கு முறை விற்பனை கூட ஏலங்களில் பங்கேற்க, ஒவ்வொரு வணிகரும் தனித்தனி உரிமம் பெற வேண்டும். தற்போது, பெரும்பாலான கூடங்களில், தேசிய வேளாண் சந்தை எனப்படும், இ-நாம் திட்டம், மின்னணு ஏல முறை எனப்படும் இ-டிரேடிங் மற்றும் மின்னணு பண பரிவர்த்தனை நடக்கிறது. எனவே, பல்வேறு கூடங்களில், ஏலம் எடுக்க, ஒவ்வொரு விற்பனை குழுவிலும் தனித்தனியாக, உரிமம் பெற தேவையில்லை. இ-நாம் திட்டத்தில் இணைந்து, உரிமம் பெற்றால், அனைத்து சந்தையிலும் பொருட்களை கொள்முதல் செய்யலாம். தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, உரிமம் பெறலாம். இவ்வாறு அவர்கள் பேசினர். இதேபோல், சத்தியமங்கலம் அடுத்த, ஆலத்துகோம்பை, கோபி அருகே கொளப்பலூரில், இ-நாம் திட்டத்தில் மின்னணு சந்தை மூலம், விளை பொருள் ஏலம் தொடர்பான பயிற்சி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை