தோல் தொழிற்சாலைகளால் புற்றுநோய்: குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அச்சம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தோல் தொழிற்சாலைகளால் புற்றுநோய்: குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அச்சம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: குடியிருப்பு பகுதியில், தோல் ஆலைகள் செயல்படுவதால், புற்றுநோய் அச்சத்தில் மக்கள் உள்ளதாக கூறி, கலெக்டரிடம் மனு தரப்பட்டது.
ஈரோடு, சூரியம்பாளையம் பகுதியில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கிராமத்தை சுற்றிலும், பாலக்காட்டூர், இந்திராபுரம், தெய்வபுரம், மரவாபாளையம், சொட்டையம்பாளையம், தண்ணீர்பந்தல் பாளையம், வீரபண்ணாடியூர், அம்பேத்கர் நகர், நரிப்பள்ளம், ஆர்.என்.புதூர் உட்பட பல பகுதி உள்ளன. இங்கு ஏராளமான தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் இருந்து சுத்திகரிக்காத கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் நிலம், நீர், காற்று மாசுபட்டுள்ளது. உப்பு கலந்த ஆசிட் நெடி வீசுவதால், சுவாசிக்க முடியவில்லை என்று, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர் இந்நிலையில், சூரியம்பாளையம் குடியிருப்போர் நலச்சங்க பொருளாளர் கேசவன் தலைமையில் வந்த மக்கள், கலெக்டர் பிரபாகரிடம், நேற்று மனு வழங்கினர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: தோல் தொழிற்சாலைகளால், புற்றுநோய் அச்சம் உள்ளது. கடந்த இரு மாதங்களில், நான்கு பேர் இறந்துள்ளதால், மக்கள் மத்தியில் பயம் அதிகரித்துள்ளது. எனவே, தொழிற்சாலைகளை அப்புறப்படுத்தி, நீர்நிலை மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அப்பால், அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை