பாட புத்தகம், நோட்டு வினியோகம்: 26 முதல் துவங்க அதிகாரிகள் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாட புத்தகம், நோட்டு வினியோகம்: 26 முதல் துவங்க அதிகாரிகள் முடிவு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள், நோட்டுகளை, 26 முதல் வினியோகிக்க கல்வி துறை முடிவு செய்துள்ளது.
நடப்பாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, பாட புத்தகங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் பாட புத்தகங்களை அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, ஆறு முதல், எட்டு வரை, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 புத்தகங்கள், 100 சதவீதம் அளவுக்கு வந்து விட்டன. ஒன்பதாம் வகுப்புக்கு, 75 சதவீதம், பிளஸ் 1க்கு, 30 சதவீதம் வந்துள்ளது. மற்ற பாட புத்தகங்கள் அச்சில் உள்ளன. வரும், 25க்குள் ஒன்பது, பிளஸ் 1 பாட புத்தகங்கள் வந்து சேருமெனத் தெரிகிறது. அதேசமயம் நோட்டுகள் குறித்து, முடிவெடுக்க முடியவில்லை. ஏனெனில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு வெளியான பிறகே, மாணவர்கள் எண்ணிக்கை தெரியவரும். இதனால் முன் கூட்டியே தயார் நிலையில் அச்சடித்து வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும், 26 முதல், மாவட்ட கல்வி அலுவலர்கள் முன்னிலையில், பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டுகள் அனுப்பும் பணி துவங்கவுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை