திடக்கழிவுகளை கிணறுகளில் கொட்டும் அவலம்: விதிகளை மீறும் பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திடக்கழிவுகளை கிணறுகளில் கொட்டும் அவலம்: விதிகளை மீறும் பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகள்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பெருந்துறை: பெருந்துறை, சிப்காட் தொழிற்சாலை திடக்கழிவுகளை, பாழடைந்த கிணறுகளில், கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில், 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. சாய, தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் போது உருவாகும் திடக்கழிவு, சுற்றுப்பகுதி பாழடைந்த கிணறுகளில் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன், சென்னிமலை அருகே, செந்தாம்பாளையம் பகுதியில், கிணற்றில் கொட்டிய தோல் தொழிற்சாலை கழிவு, மக்களின் எதிர்ப்பால், தோண்டி அப்புறப்படுத்தப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன், திடக்கழிவுகளை அப்புறப்படுத்துவது சிரமமாக இருந்தது. தற்போது கழிவுநீரை சுத்திகரிக்க, சுண்ணாம்பு (கால்சியம் கார்போனேட்) பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் திடக்கழிவுகளில் சுண்ணாம்பு நிறைந்துள்ளது. இதை, சிமென்ட் தயாரிப்பில், மூலப்பொருளாக பயன்படுத்தலாம், என்று ஆய்வில் கண்டறியப்பட்டது. இதனால் திடக்கழிவுகளை, சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்ப, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியது. இதன்படி அரியலூர், கரூர், சங்ககிரி, மதுக்கரை பகுதி சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. டன் ஒன்றுக்கு, 2,500 ரூபாய் அடிப்படையில், ஆலைகள் கட்டணம் வசூலிக்கின்றன. செலவை குறைக்கும் வகையில், சில நிறுவனங்கள், சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பாமல், உள்ளூர் டிப்பர் லாரி உரிமையாளர்களுக்கு பணம் கொடுத்து, பாழடைந்த கிணறுகளில் கொட்டுகின்றன. நள்ளிரவு நேரத்தில் கொட்டி விட்டு, மேற்பகுதியில் மட்டும் கிராவல் மண்ணை கொட்டி மூடுவதாக, புகார் எழுந்துள்ளது.கிணறுகளில் கொட்டுவதால், நிலத்தடி நீர் மாசடைந்து, குடிப்பதற்கும், விசசாயத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலைக்கு, அந்த தண்ணீர் மாறியுள்ளது.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சரவணக்குமார் கூறியதாவது: கடந்த ஒன்றரை ஆண்டில், 28 ஆயிரம் டன் திடக்கழிவு, சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திடக்கழிவு ஏற்றிய பின், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலக பதிவேட்டில், லாரி எண், அளவு, சேருமிடம் குறித்து, பதிவு செய்யப்படுகிறது. கொண்டு சேர்த்ததையும் உறுதிப்படுத்துகிறோம். எனவே, வேறிடத்துக்கு கொண்டு செல்ல வாய்ப்பில்லை. திடக்கழிவு கொட்டுவது குறித்து, இதுவரை ஒரு புகார் மட்டும் எழுந்தது. அதுவும் அப்புறப்படுத்தப்பட்டது. எனினும், தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை