ஈரோடு எஸ்.பி., தூக்கியடிக்கப்பட்டது ஏன்? அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., வாசித்த புகார் பட்டியல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு எஸ்.பி., தூக்கியடிக்கப்பட்டது ஏன்? அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., வாசித்த புகார் பட்டியல்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஈரோடு: ஈரோடு எஸ்.பி., மாற்றத்தில், எம்.எல்.ஏ., தலையீடு இருப்பதாக, போலீஸ் அதிகாரிகள் மத்தியில், பேச்சு எழுந்துள்ளது.
ஈரோடு எஸ்.பி., சிவக்குமார், சென்னை போக்குவரத்து பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்துக்கு, முதல்வர் கடந்த வாரம் வந்து சென்ற நிலையில், இந்த இடமாற்றம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'எஸ்.பி.,க்களுக்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பணியிட மாறுதல் அளிக்கப்படுவது வழக்கம். எஸ்.பி., சிவக்குமார் பணிக்காலம் முடிய, இரண்டு மாதங்கள் உள்ளன. எனவே, வழக்கமான மாற்றம் தான்' என்றனர்.போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ஈரோட்டில் உள்ள, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., ஒருவருடன், பல விஷயங்களில், எஸ்.பி., சிவக்குமார் ஒத்து போகவில்லை. உதாரணமாக லாட்டரி விற்க அனுமதி, சீட்டாட்ட கிளப் நடத்துவது, மசாஜ் சென்டர் பெயரில் விபசார விடுதி நடத்துவது போன்றவற்றில், இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. சட்டபூர்வமான சில விஷயங்களில், எஸ்.பி., கண்டும் காணாமல், கால தாமத போக்கை கடைபிடித்தார். இது எம்.எல்.ஏ.,வுக்கு எரிச்சல், கோபத்தை ஏற்படுத்தியது. சமயம் பார்த்து, அரசியல் பலத்தை காட்டி உள்ளார் எம்.எல்.ஏ., அதேசமயம், மக்கள் நீதி மய்யம் சார்பில், கடந்த மாதம் ஈரோட்டில், நடந்த கூட்டத்தில், பெரிய அளவில் கூட்டம் கூடியது. மாநகருக்குள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதித்தது, பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்டம் முழுவதும் நடத்த அனுமதித்தது, கூட்டத்தில் பிரச்னை நிகழாமல் பார்த்து கொண்டது என, எஸ்.பி., சிவக்குமார் மீது, எம்.எல்.ஏ., புகார் பட்டியல் வாசித்துள்ளார்.நடிகர் கட்சி வளர்ச்சியால், ஏற்கனவே அதிருப்தியில் இருந்த தலைமைக்கு, எஸ்.பி.,யின் போக்கு அதிர்சியை ஏற்படுத்தியது. மாற்றம் செய்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருந்தது. நேற்று முன்தினம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, வழக்கமான பணியிட மாற்றம் என கணக்கு காட்டி, பழி தீர்த்து கொண்டது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை