ரவுடி வெட்டிக் கொலை: காரில் வந்த கும்பல் வெறிச்செயல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடி வெட்டிக் கொலை: காரில் வந்த கும்பல் வெறிச்செயல்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: ஓசூர் அருகே, நேற்று இரவு, டூவீலரில் சென்ற ரவுடியை, காரில் வந்த கும்பல் வெட்டிக் கொன்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னதாசப்பா. இவரது மகன் வெங்கட்ராஜ், 30, ரவுடி. இவர் மீது, மூன்று கொலை வழக்குகள் உள்ளன. நேற்றிரவு, 8:00 மணிக்கு, கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், காமன்தொட்டி அருகில் பாத்தகோட்டா பிரிவு சாலை அருகே, நண்பர்கள், இருவருடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரை பின்தொடர்ந்து வந்த கார், டூவீலர் மீது மோதியது. இதில், கீழே விழுந்தவர்களை, காரில் இருந்து இறங்கிய, நான்கு பேர் கொண்ட கும்பல், வீச்சரிவாளால் வெட்டியது. இதில், வெங்கட்ராஜ் இறந்தார். இரு நண்பர்களும் தப்பியோடினர். சூளகிரி போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். 'மூன்று கொலை வழக்கில் தொடர்புடைய வெங்கட்ராஜை, அதில் சம்மந்தப்பட்ட யாராவது பழி வாங்கும் நோக்கில், கொன்றிருக்கலாம்' என்று, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X