ஆட்டுக்கல்லை மனைவியின் தலையில் போட்டு கொலை செய்த கணவன் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டுக்கல்லை மனைவியின் தலையில் போட்டு கொலை செய்த கணவன் கைது

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: குடும்ப தகராறில், மனைவியின் தலையில் ஆட்டுக்கல்லை தூக்கி போட்டு, கொலை செய்த கணவனை, போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி, மேலத்தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சரவணன், 38. இவரது மனைவி பரமேஸ்வரி, 37. இவர்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ரோகித், 7, ஸ்ரீதர்ஷன், 4, என, இரு மகன்கள் உள்ளனர். சரவணன், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததால், தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சரவணன், வீட்டிலிருந்த ஆட்டுக்கல்லை எடுத்து, மனைவியின் தலையில் போட்டார். தலை நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அப்பகுதியினர், கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்து, சரவணன், வீட்டைவிட்டு ஓடாமல் இருக்க, இரு கதவுகளையும் பூட்டினர். போலீசார், உடலை மீட்டு, சரவணணை கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை