அரசு பஸ் டிரைவரை தாக்கிய வக்கீல் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் டிரைவரை தாக்கிய வக்கீல் கைது

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: அரசு பஸ் டிரைவரை தாக்கிய வக்கீலை, போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 55; சேலம், அரசு போக்குவரத்துக்கழகத்தின், எருமாபாளையம் கிளை பணிமனை - 2ல், டிரைவராக பணிபுரிகிறார். நேற்று காலை, சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்திலிருந்து, சேலம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் தடம் எண்: '13பி' பஸ்சை ஓட்டிச்சென்றார். சீலநாயக்கன்பட்டி பைபாஸில் நிறுத்தியபோது, பயணிகள் இறங்கினர். அதில், மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த, நாமக்கல் நீதிமன்றத்தில், வக்கீலாக பணிபுரியும் அன்பரசன், 47, 'பஸ் ஏன் தாமதமாக வந்தது' என, ராஜேந்திரனிடம் கேள்வி எழுப்பினார். அதில், அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அன்பரசன், ராஜேந்திரனை தாக்கினார். அவர், பஸ்சிலிருந்து இறங்க முயன்றபோது, கையில் வைத்திருந்த குடிநீர் பாட்டிலால் அடித்துவிட்டு, வக்கீல் ஓட முயன்றார். மக்கள், அவரை பிடித்து, சோதனைச்சாவடி, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், அன்னதானப்பட்டி ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவர், போதையில் இருந்தாரா என, போக்குவரத்து பிரிவு ஆர்.ஐ., பழனியப்பன் சோதனை மேற்கொண்டார். ராஜேந்திரன், கண்டக்டர் சண்முகம் அளித்த புகார்படி, ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல், தாக்குதல் ஆகிய பிரிவுகளில், வக்கீல் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை