பெட்ரோல் அளவை குறைத்து மோசடி: பங்க்கை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் அளவை குறைத்து மோசடி: பங்க்கை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காடையாம்பட்டி: பெட்ரோல் வினியோக அளவில், முறைகேடு நடப்பதாக, வாடிக்கையாளர்கள், பங்க்கை முற்றுகையிட்டனர்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, காருவள்ளி ஜோடுகுழி சாலையில், எம்.வி.எம்., ?ஹரிடேஜ் சார்பில், பாரத் பெட்ரோல் பங்க் உள்ளது. அங்கு, நேற்று காலை, வாடிக்கையாளர்கள் பெட்ரோல் போட்டபோது, அளவில் வேறுபாடு உள்ளதாக புகார் தெரிவித்தனர். சிலர், ஒரு லிட்டர் பாட்டிலில், பெட்ரோல் வாங்கியபோது, குறைந்தளவு இருந்ததால், ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அதேநேரம், பெட்ரோல் போட்டுச்சென்ற பலரும், திரும்பிவந்து அளவு குறைவாக உள்ளதாக கூறி, பங்க்கை முற்றுகையிட்டனர். தீவட்டிப்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போகச் செய்தனர். பங்க் மேலாளர் கார்த்திக் கூறுகையில், '' வாடிக்கையாளர்கள் கோரிக்கையால், ஊழியர்களை மாற்றுவது குறித்து, உரிமையாளரிடம் தெரிவிக்கப்படும். இதுபோன்று, மீண்டும் நடக்காது,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை