டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 20 முதல் லாரிகள் 'ஸ்டிரைக்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 20 முதல் லாரிகள் 'ஸ்டிரைக்'

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம்: ''சுங்க கட்டணம், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, ஜூலை, 20 இரவு முதல் லாரிகள் இயங்காது; காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம், என, அகில இந்திய மோட்டார் காங்., நிர்வாக குழு உறுப்பினர் சென்னகேசவன் கூறினார். டில்லியில், அகில இந்திய மோட்டார் காங்., தலைவர் மிட்டல் தலைமையில், செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது. இதுகுறித்து, அகில இந்திய மோட்டார் காங்., நிர்வாக குழு உறுப்பினர் சென்னகேசவன் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் மீது, 47 சதவீத வரி வசூலிப்பதால், விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. லாரி உரிமையாளர்களுக்கு, மாதம், 1,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. லாரிகளுக்கு, மூன்றாம் நபர் காப்பீட்டுத்தொகையில், 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாடு முழுவதுமுள்ள சுங்கச்சாவடிகள், தங்கள் கட்டணத்தை முழுமையாக வசூலித்தும், தொடர்ந்து இயங்குகின்றன. ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த கோரிக்கை விடுத்தும், மத்திய தரை வழிப்போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. டீசல் விலை உயர்வால், வாகன உதிரிபாகங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள், லாரி உரிமையாளர்களின், 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, ஜூலை, 20 முதல், நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள, 4.50 லட்சம் உள்பட, நாட்டிலுள்ள, 45 லட்சம் லாரிகள், ஜூலை, 20 நள்ளிரவு முதல் இயங்காது. இத்தொழிலை நம்பி வாழும், தமிழகத்தில் ஒரு கோடி உள்பட, 10 கோடி பேர் வேலையிழக்க நேரிடும். சரக்குகளின் பரிமாற்றம் முற்றிலும் தடைபட்டு, அத்யாவசியப் பொருட்களின் விலை, பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், மத்திய அரசு, எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை