கதர் வாரிய நிறுவன பஞ்சு மில்: பத்தாண்டுகளாக செயல்படாமல் வீண்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கதர் வாரிய நிறுவன பஞ்சு மில்: பத்தாண்டுகளாக செயல்படாமல் வீண்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பத்தாண்டுகளுக்கும் மேலாக செயல்படாத, கதர் வாரியத்தின் பஞ்சு மில்லின் இயந்திரங்கள், துருப்பிடித்து வீணாகியுள்ளன.
சேலம் மாவட்டம், சென்னகிரி ஊராட்சிக்குட்பட்ட, துலுக்கனூர் ஏரி அருகே, 1991ல் அப்போதைய கதர்துறை அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமியால், 9.75 ஏக்கர் பரப்பளவில், கதர் வாரியம் சார்பில், பஞ்சு மில் திறக்கப்பட்டது. 20 தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாக, 70 பேரும் வேலை வாய்ப்பு பெற்றிருந்தனர். 2001 வரை நல்ல நிலையில் செயல்பட்டு வந்த மில், நூல் விலை வீழ்ச்சியால் இழுத்து மூடப்பட்டு, 2005 வரை பூட்டப்பட்டிருந்தது. மீண்டும் மில் பகுதியை தவிர்த்து, மற்ற இரண்டு கட்டடங்களில், மகளிருக்கு காலணி தைக்க பயிற்சியளித்து, உற்பத்தி செய்யப்பட்டது. ஓராண்டு மட்டுமே செயல்பட்ட இதுவும், 2007ல் நிறுத்தப்பட்டது. அன்றிலிருந்து, இன்றுவரை பஞ்சு மில் மற்றும் கிடங்குகள் பயன்பாடின்றி பூட்டியேயுள்ளது. இயந்திரங்கள் துருப்பிடித்து காணப்படுகின்றன. கிடங்குகளை சுற்றியுள்ள இடத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி, விஷ ஜந்துக்களின் நடமாட்டமாக மாறியுள்ளது.

இதுகுறித்து, சேலம் கதர் வாரிய உதவி இயக்குனர் ரூபி அலிமா பாய் கூறியதாவது: இதுவரை மில் செயல்படாதது, புதர்மண்டியது குறித்து புகார் எதுவும் வரவில்லை, நல்ல நிலையில் உள்ள, இரண்டு கிடங்குகளில், கதர் பொருட்களை இருப்பு வைத்துள்ளோம். செயல்படாத பஞ்சு மில்லை, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து, இயக்குனர்கள் கூட்டம் கூடி தான், முடிவு எடுக்க முடியும். அதற்கான முயற்சி விரைவில் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை