17 நாளில் மேட்டூர் அணைக்கு 1.25 டி.எம்.சி., நீர்வரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

17 நாளில் மேட்டூர் அணைக்கு 1.25 டி.எம்.சி., நீர்வரத்து

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோடைமழையால் மேட்டூர் அணைக்கு கடந்த, 17 நாட்களில், 1.25 டி.எம்.சி., நீர் வந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு, 1,345 அடியாக அதிகரித்துள்ளது.
கோடைகாலம் துவங்கி நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் ஏற்பட்ட வறட்சியால், கடந்த மாதம் மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு, 100 கனஅடிக்கும் கீழே சரிந்தது. ஆனால், மே மாதம் துவகத்தில் இருந்து அவ்வப்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கோடைமழை தீவிரம் அடைந்து, மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்தது. அதிகபட்சமாக கடந்த, 9 ல் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 1,970 கனஅடி நீர்வந்தது. மே மாதத்தில் நடுவர் மன்றம் தீர்ப்பு, உச்சநீதிமன்ற உத்தரவுபடி கர்நாடகா நீர் திறக்கவில்லை. இந்நிலையில், கோடைமழை கைகொடுத்ததால் கடந்த, 17 நாட்களில் மேட்டூர் அணைக்கு, 1.25 டி.எம்.சி., நீர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று அணை நீர்மட்டம், 33.69 அடி, நீர் இருப்பு, 9.03 டி.எம்.சி.,யாக இருந்தது.

நீர் வரத்து அதிகரிப்பு: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மாவட்ட மலையில் பெய்யும் மழையே, பிரதான நீர்வரத்தாகும். அணையில் சேறு, சகதி கழித்து, 105 அடி உயரம் வரை நீர் தேக்கி வைக்க முடியும். நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு வாரங்களுக்கு முன் பெய்த மழையால், நீர்மட்டம் சற்று உயர்ந்தது. இந்நிலையில்,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி மலை பகுதி மற்றும் பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில், கடந்த இரு நாட்களாக, பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வனப்பகுதி வழியாக வரும், மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 440 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 1,345 கன அடியாக அதிகரித்தது. நேற்று மாலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம், 48.84 அடி,நீர் இருப்பு, 4.1 டி.எம்.சி.யாக இருந்தது. குடிநீர் தேவைக்காக, பவானி ஆற்றில், 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில், ஐந்து கன அடி தண்ணீரும் திறக்கப்படுகிறது. கோடை துவங்கியுள்ள நிலையில், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை