'இறந்த விலங்குகளை புதைத்தால் நடவடிக்கை'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'இறந்த விலங்குகளை புதைத்தால் நடவடிக்கை'

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குடியாத்தம்: 'இறந்த வன விலங்குகளை, புதைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில், ஒரு லட்சத்து, 62 ஆயிரத்து, 286 ஹெக்டேர் பரப்பில், வனப்பகுதி உள்ளது. மான், காட்டுப்பன்றி, உடும்பு, நரி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. தண்ணீர் தேடி, வனப்பகுதியை விட்டு, ஊருக்குள் படையெடுக்கும் வனவிலங்குகள் நாய்களால் கடிபட்டும், வாகனங்களில் அடிபட்டும் இறக்கின்றன. இதுகுறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல், இறந்த விலங்குகளின் உடல்களை பொதுமக்களே புதைத்து விடுகின்றனர். சிலர், மானின் இறைச்சி, கொம்புகளை எடுத்து விற்பனை செய்வதாகவும், வனத்துறையினருக்கு புகார் சென்றது.இதுகுறித்து, வனத்துறையினர் கூறியதாவது: வனப்பகுதிகளை ஒட்டி உள்ள கிராமங்களில், வன விலங்குகள் இறந்து கிடந்தால், அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சிலர், வனவிலங்குகளின் உடல்களை புதைத்தாலோ, இறைச்சி, கொம்புகளை வெட்டி விற்பனை செய்தாலோ, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X