சிறுமியருக்கு பாலியல் தொல்லை: போலீசில் முதியவர் சரண்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியருக்கு பாலியல் தொல்லை: போலீசில் முதியவர் சரண்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: செங்கம் அருகே, சிறுமிகளை கடத்தி, பாலியல் பலாத்காரம் முயற்சியில் ஈடுபட்ட முதியவர், போலீசில் சரணடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கல்தம்பாடி கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன்,45, மனைவி குள்ளம்மாள்,40; கல் உடைக்கும் தொழிலாளிகள். இவர்களது, 12 மற்றும் 8 வயதுடைய, இரு மகள்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், மோட்டூர் கிராமத்தில் உள்ள, அரசு பள்ளியில், ஆறாவது மற்றும் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்களை, கல்தம்பாடியை சேர்ந்த, பச்சையப்பனின் உறவினர் காசி,60, பெற்றோரிடம் கூட்டிச் செல்வதாகக் கூறி, நேற்று முன்தினம் அழைத்து வந்தார். அப்போது, அரியாகுஞ்சூர் வனப்பகுதியில், சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். பயந்துபோன ஒரு சிறுமி, அங்கிருந்து தப்பியோடி, பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தார். பொதுமக்கள் வருவதைக்கண்ட காசி, அங்கிருந்து தப்பியோடினார். புகாரின்படி, செங்கம் போலீசார், அவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை, போலீசில் காசி சரணடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X