ஊட்டி மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார் முதல்வர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டி மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார் முதல்வர்

Updated : மே 18, 2018 | Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஊட்டி மலர் கண்காட்சி,  ஊட்டி கோடை விழா, முதல்வர் பழனிசாமி ,நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா , நீலகிரி மாவட்டம்,தாவரவியல் பூங்கா, 
Ooty Flower Exhibition, Nilgiris District, Ooty Summer Festival, Botanical Gardens, Chief Minister Palanisamy, Nilgiri Collector Innocent Divya,

ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, 122வது மலர் கண்காட்சி இன்று துவங்கியது. இதற்காக, தாவரவியல் பூங்காவில், 189 ரகங்களில், 35 ஆயிரம் தொட்டிகளில் பல லட்சம் மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சம் மலர்களால் அமைக்கப்பட்ட மேட்டூர் அணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடந்த விழாவில், முதல்வர் பழனிசாமி கண்காட்சியை துவக்கி வைத்தார். அமைச்சர்கள், எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர்.

பின்னர், 1,850 கோடி மதிப்பீட்டில் குந்தா நீரேற்று புனல் மின் திட்டப்பணி; 7.49 கோடி மதிப்பீட்டில், ஏழு முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைக்கிறார்.விழாவையொட்டி, 2,000 போலீசார் பாதுகாப்பு பணியி ல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், மலர் கண்காட்சிக்கான சிறப்பு பஸ்களை, அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது. இதை தவிர, ஊட்டியில் சுற்றுலா மையங்களுக்கு செல்ல, 'சர்கியூட்' பஸ்களும் இயக்கப்படுகின்றன.மலர் கண்காட்சியை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை