திட்டக்குடி அருகே தீவிபத்தில் எட்டு குடிசை வீடுகள் சாம்பல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திட்டக்குடி அருகே தீவிபத்தில் எட்டு குடிசை வீடுகள் சாம்பல்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தீ விபத்து குடிசை வீடுகள் சாம்பல்,  கடலூர் மாவட்டம், ஆவினங்குடி போலீசார் விசாரணை, திட்டக்குடி அருகே தீ விபத்து, கடலூர் தீ விபத்து,  தொளார் கிராமம், 
Fire accident Cottage houses Ash, Cuddalore district, Avinangudi police investigation, Cuddalore fire accident, Tholar village, 
Fire accident near thittagudi,

திட்டக்குடி: கடலூர் மாவட்டம்,திட்டக்குடி அருகே தொளார் கிராமத்தில் மர்மமான முறையில் 8 கூரை வீடுகள் தீப்பற்றி 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தில் பழைய காலனியில் இன்று அதிகாலை 1 மணிக்கு மணிகண்டன்(25) என்பவரின் வீடு தீபிடித்தது. காற்றின் வேகத்தில் அருகில் இருந்த மணிவாசகம், சுப்பிரமணியன், செல்லம்மாள், லோகநாதன், பிச்சப்பிள்ளை, மாயவேல், மகேஸ்வரி ஆகியோர் வீடுகளும் தீ பரவியது.. அருகில் இருந்த இளைஞர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். தீ அதி வேகமாக அடுத்தடுத்து வீடுகளுக்கு பரவியதால் வீடுகளிலிருந்து எந்த பொருட்களும் எடுக்க முடியவில்லை.
இதில் மகேஸ்வரி வீட்டில் 55 ஆயிரம் பணம், 3 சவரன் நகையும், சுப்பிரமணியன் வீட்டில் 15 ஆயிரம் பணம் தீயில் எரிந்ததது. மொத்த மதிப்பு 10 லட்சம் ஆகும்.இதில் மணிகண்டன், மணிவாசகம், லோகநாதன் வீடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் தீபிடித்து எரிந்தது. இதனால் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் தீ வைத்தனரா என ஆவினங்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை