பாலக்காடு கோட்டத்தில் இணைத்ததால் ஏற்றமில்லை... ஏமாற்றமே!| Dinamalar

தமிழ்நாடு

பாலக்காடு கோட்டத்தில் இணைத்ததால் ஏற்றமில்லை... ஏமாற்றமே!

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், ஒரே ஒரு டிக்கெட் கவுன்டர் மட்டுமே செயல்படுவதால், விசேஷ நாட்களில் டிக்கெட் எடுக்க பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ஸ்டேஷனுக்கு ரயில் வந்தாலும், டிக்கெட் எடுக்க முடியாமல் தவற விடும் அவலம் நீடிக்கிறது.பொள்ளாச்சியில் அகல ரயில் பாதை பணிகள் முடிந்ததும், முதலில் ஒரு ரயில் மட்டும் இயங்கி வந்த நிலையில், குறைந்தளவு ஊழியர்கள் இருந்தாலும், பணிகள் பாதிப்படையவில்லை. தற்போது, இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள், மூன்று பயணிகள் ரயில்கள் பொள்ளாச்சி வழியாக செல்கின்றன. அவ்வப்போது சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
இதனால், ரயில்வே பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பொள்ளாச்சியில் இருந்து ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். இதற்கு தகுந்தாற் போல் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.தற்போதும் ஒரு ரிசர்வேஷன் கவுன்டர் மட்டுமே உள்ளது. அதுவும் காலை, 8:00 மணியில் இருந்து மதியம், 2:00 மணி வரை ஒரு ஷிப்ட் மட்டுமே செயல்படுகிறது. முன்பதிவில்லாத பயணச்சீட்டு எடுக்கும் 'அன் ரிசர்வ்' கவுன்டரும் ஒன்று மட்டுமே உள்ளது.பயணிகள் ரயிலுக்கு செல்லும் கூட்டம் அதிகளவு குவியும் போது, அனைவரும் ஒரே டிக்கெட் கவுன்டரில் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. அங்கு பணியாற்றும் ஒரு ஊழியர், பாதிப் பேருக்கு டிக்கெட் கொடுத்து முடிப்பதற்குள், நேரம் கடந்து ரயில் புறப்பட்டு விடுகிறது. இதனால், நுாற்றுக்கணக்கான பயணிகள் ரயிலை தவற விட்டு ஏமாற்றத்துடன் திரும்பும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமே திருச்செந்துாருக்கு ரயில் இயக்கப்படுவதால், அன்று கூட்டம் இரு மடங்காக இருக்கிறது. அமாவாசைக்கு முந்தைய மற்றும் அடுத்த நாட்களில், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்றும், அமாவாசையன்றும் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றோரில், பாதிக்கும் மேற்பட்டோர் ரயிலை தவற விட்டனர். இது பற்றியெல்லாம், பாலக்காடு கோட்டம் அலட்டிக் கொள்ளாமல், ஒற்றை கவுன்டரில் மட்டுமே டிக்கெட் வழங்குவது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் ஊழியர்களை நியமித்து, கூடுதல் டிக்கெட் கவுன்டரை செயல்படுத்த வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்க்காக உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை