கிராம வாரச்சந்தை வளாகங்களுக்கு...மூடுவிழா ! கண்டுகொள்ளாத ஒன்றிய நிர்வாகம் | Dinamalar

தமிழ்நாடு

கிராம வாரச்சந்தை வளாகங்களுக்கு...மூடுவிழா ! கண்டுகொள்ளாத ஒன்றிய நிர்வாகம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

உடுமலை:உடுமலை அருகே, பராமரிப்பில்லாமல், பரிதாப நிலையில் காணப்படும், கிராம வாரச்சந்தை வளாகத்தை புனரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம், அனிக்கடவு ஊராட்சிக்குட்பட்ட ராமச்சந்திராபுரத்தில், வாரச்சந்தை உள்ளது.
இச்சந்தைக்கு கடந்த, 2008 - 09ம் நிதியாண்டில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 2.55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கடைகளுக்கு மேடைகளும் மற்றும் மக்கள், வியாபாரிகளுக்கு பயன்படும் வகையில் குடிநீர் தொட்டியும் கட்டப்பட்டது. அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், விருகல்பட்டி, நஞ்சேகவுண்டன்புதுார் உட்பட பல கிராம விவசாயிகள் மற்றும் மக்கள் இச்சந்தையால் பயன்பெற்று வந்தனர்.
இந்நிலையில், தொடர், பராமரிப்பில்லாததால் வாரச்சந்தை வளாகத்தில், புதர்ச்செடிகள் வளர்ந்து, சுகாதாரமற்ற நிலைக்கு மாற துவங்கியது. சந்தை இல்லாத பிற நாட்களில், வளாகம் திறந்தவெளி கழிப்பிடமாக மாறியது. எனவே, வாரச்சந்தைக்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருகை குறைந்தது.
இருப்பினும், தாங்களாகவே, சந்தை வளாகத்தை துாய்மைப்படுத்தி, சனிக்கிழமைகளில், 10க்கும் குறைவான கடைகளை விவசாயிகள் அமைத்து வந்தனர். தற்போது, சந்தை முற்றிலுமாக பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. உடுமலை, பொள்ளாச்சி, பெதப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகள், நீண்ட துாரத்தில் அமைந்துள்ளதால் வாரச்சந்தை இப்பகுதி மக்களுக்கு பெரிதும் உபயோகமாக இருந்தது.ஆண்டுதோறும் ஒன்றிய நிர்வாகம் சார்பில் வாரச்சந்தையை பராமரிக்கும் பொறுப்புக்கு ஏலம் விடப்படுகிறது.
அதன்படி, நடப்பாண்டில், 2,650 ரூபாய்க்கு ஒப்பந்ததாரர்கள் சந்தையை ஏலம் எடுத்துள்ளனர். ஒன்றிய நிர்வாகத்தின் அலட்சியத்தால், வாரச்சந்தை வளாகம், பயனில்லாமல் மூடப்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வாரச்சந்தை வளாகத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளர் சுப்ரமணியன் கூறுகையில், '' வார சந்தையை பராமரிக்கும் பொறுப்பினை ஒப்பந்ததாரர்களே மேற்கொள்ள வேண்டும். மேலும், சந்தை வளாகத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு கிராம மக்களுக்கும் உள்ளது. கடந்த, பிப்.,யில் வாரச்சந்தை வளாகத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிட்டது,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை