I Am Kalki Avatar, Can't Come To Office, Says Gujarat Government Officer | நான் கல்கி அவதாரம் என்பதால் அலுவலகம் வரமாட்டேன் : குஜராத் அரசு அதிகாரியால் பரபரப்பு| Dinamalar

நான் கல்கி அவதாரம் என்பதால் அலுவலகம் வரமாட்டேன் : குஜராத் அரசு அதிகாரியால் பரபரப்பு

Added : மே 20, 2018 | கருத்துகள் (77)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Kalki avatar, Gujarat government official,Ramesh Chandra, கல்கி அவதாரம், குஜராத் அரசு அதிகாரி, நான் கல்கி அவதாரம், சர்தார் சரோவர் புனர்வஸ்வத் அமைப்பு,அரசு அதிகாரி ரமேஷ்சந்திரா, 
 Sardar Sarovar Punawaswat organization, Government officer Ramesh Chandra,

ஆமதாபாத் : தான் கல்கி அவதாரம் என்றும், தான் மேற்கொண்ட தவத்தாலேயே, நாடெங்கும் மழை பெய்வதாக குஜராத் அரசு அதிகாரி கூறிய நிகழ்வு, சமூகவலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

சர்தார் சரோவர் புனர்வஸ்வத் அமைப்பின் அதிகாரியாக இருப்பவர் ரமேஷ்சந்திரா பெபார். இவர் கடந்த சிலநாட்களாக பணிக்கு வரவில்லை. இதனையடுத்து, அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு 2 பக்க அளவில் பெபார் பதில் அனுப்பியுள்ளார்.


அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

என்னிடம் தெய்வீக சக்தி இருப்பதை, 2010ம் ஆண்டில் தெரிந்துகொண்டேன். என்னுடைய தீவிர தேடுதலின் முயற்சியாக, மகாவிஷ்ணுவின் 10வது அவதாரமான கல்கி அவதாரமே, தான் தான் என்பதை தெரிந்து கொண்டேன்.

இப்போது நாட்டின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கு தான் மேற்கொண்ட தவம் தான் காரணம். நாட்டில் அமைதி நிலவும்பொருட்டு, மக்களிடையே ஒருமித்த அமைதித்தன்மை ஏற்படுத்தும் பொருட்டு, நான் கடும் தவம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். இந்த தவத்தை, தான் அலுவலகத்தில் பணியில் இருந்து ஈடுபட முடியாது. அதனால், அலுவலகத்திற்கு வர இயலாது என்று அதில் பெபார் குறிப்பிட்டுள்ளார்.

தான் மேற்கொண்ட தவத்தின் பலனாகவே, நாட்டில் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துவருவதாக அவர் மேற்கோள் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rahul - Chennai,இந்தியா
21-மே-201810:11:59 IST Report Abuse
Rahul எல்லாரும் ஓடிவங்க...... புது இந்தியா பொறந்துடுச்சு......
Rate this:
Share this comment
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
21-மே-201803:58:50 IST Report Abuse
Palanisamy T ஹிந்துமதக் கோட்ப்பாடுகளை கண்மூடித் தனமாக படிப்பவர்களுக்கு இப்படிப் பட்ட மனக் கோளாறுகள் வருவது இயல்புதான் இவர் ஒரு நல்ல மனநல மருத்துவ நிபுணரை சந்தித்து சிகிச்சைக் செய்துக் கொள்வது நன்று மற்ற மதங்களை போன்று இந்து மதத்திலும் நிறைய மூட நம்பிக்கைகளும் போலிக் கோட்ப்பாடுகளும் கட்டுப்பாடுகளும் நிறைந்துள்ளன அதிலொன்றுதான் அவதாரமென்ற போலித் தத்துவம் இறைவன் அவதாரமெடுப்பதில்லை ராமரும் கிருஷ்ணரும் வழிப்பாட்டிற்குரிய தெய்வங்கள் அவர்கள் அவதாரப் புருஷர்களில்லை சைவ மணம் கமழும் தமிழக மக்கள் இந்த உண்மையை உணர்ந்துக் கொள்வது நன்று அருணகிரிநாத ஸ்வாமிகள் இதற்குமுன் தானெடுத்த எண்ணற்றப் பிறப்புக்களைதான் அவதாரமாகப் பாடியுள்ளார் திருவாசகம் இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பதை அந்த இறைவனை போக்கும் வரவும் புணர்வுமில்லாப் புண்ணியனே என்றுதான் பாடியுள்ளது இந்துமதத்திலும் நிறைய நல்ல சேதிகளிருக்கும் போது நாம் உண்மையறியாது அதன் தவறானக் கோட்ப்பாடுகளுக்கு அடிமைப்பட்டுவிடக் கூடாது. கல்கி அவதாரமென்பது ஒருப் போலியான தத்துவம். இதன் விளைவுதான் இப்படிப்பட்ட மனக்கோளாறுகள்.
Rate this:
Share this comment
Cancel
jysen - Madurai,இந்தியா
21-மே-201800:04:10 IST Report Abuse
jysen He is also from Gujarat, the state of Nirav and Lalith Modi.
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
20-மே-201819:59:19 IST Report Abuse
ManiS There were so much mentally affected peoples roaming here
Rate this:
Share this comment
Cancel
20-மே-201819:09:04 IST Report Abuse
ஆப்பு முகத்துல தவக்களை தெரியுதே....
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
20-மே-201817:05:23 IST Report Abuse
Sanny சரி,சரி உங்க சம்பளத்தை பெருமாள் உண்டியலில் போட்டுவிடுகிறோம்.
Rate this:
Share this comment
Cancel
Sudarsanr - Muscat,ஓமன்
20-மே-201815:38:10 IST Report Abuse
Sudarsanr நல்ல மன நல மருத்துவரிடம் காட்டவும்.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
20-மே-201815:14:36 IST Report Abuse
vnatarajan இந்த அவதாரத்தை மெண்டல் ஆசுபத்திரியில் தான் சேர்க்கணும் இல்லாவிட்டால் இன்னும் சில நாட்களில் தசா அவதாரமும் தான் தான் என்று கூறிவிடுவார்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
20-மே-201814:56:40 IST Report Abuse
A.George Alphonse Due to Summer and unbearable heat this man's head screws might have gone loose after the summer he may come to office with doctor certificate and fitness certificate.
Rate this:
Share this comment
Cancel
Sriman - Chennai,இந்தியா
20-மே-201814:46:42 IST Report Abuse
Sriman சரி ஏதாவது பண்ணிட்டு போவட்டும், வேலை செய்த வரை சம்பளத்தை குடுத்து செட்டில்மென்ட் செய்துவிட்டு அடுத்த ஆளை அப்பாயிண்ட்மெண்ட் பண்ணிட்டு போக வேண்டியதுதானே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை