பல்கலைகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பல்கலைகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

Added : மே 20, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பல்கலைக்கழகங்கள், உலக சுற்றுப்புற சூழல் தினம், பிளாஸ்டிக் மாசு, யுஜிசி அறிவிப்பு, மத்திய மனிதவளத்துறை அமைச்சகம்,  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், யுஜிசி, பிளாஸ்டிக்,ஐநா சபை, UGC, Plastic, Universities, World Environment Day, UN Council, Plastic Pollution, UGC Announcement, Ministry of Human Resources, Ministry of Environment,

புதுடில்லி : உலக சுற்றுப்புற சூழல் தினம் வரும் 5-ம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி ஐநா சபை சார்பில் 'பிளாஸ்டிக் மாசுவை அகற்றுவோம்' என்ற கருத்தை முன்னிறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து இந்தியாவில் பல்கலைக்கழக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

யுஜிசி அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பிளாஸ்டிக் டீ கப்கள், உணவு எடுத்துச்செல்லும் பிளாஸ்டிக் கப்கள், பிளாஸ்டிக் பைகள், டிஸ்போசபிள் உணவு பரிமாறும் கப்கள், பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இது தவிர ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மெகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யவேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைக்க இது நல்ல சந்தர்ப்பம். மாணவர்கள் தங்களது அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் விரும்புகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தவிர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பள்ளி வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கவும் பள்ளி நிர்வாகங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
atara - Pune,இந்தியா
20-மே-201816:36:59 IST Report Abuse
atara The writing pens, they have plastic, Foot wear they use plastic , The paint works in college building is plastic , The Bulbs they buy LED lamps they use plastic , Computers are made with plastic , Book bags they have made of plastic. They have to use Jute bags or cotton bags , Leather Foot wears or wooden foot wear , Eat in Banana leaf packed food and news paper packed food, Writing pens let them use wood or metal pens , Eye Glass they use made of plastic so change to metal and Glass frames , Their project print out don't do have all hand written notes. since The print Ink is plastic toner material.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
20-மே-201816:30:14 IST Report Abuse
vnatarajan இப்படி எல்லாம் தடை போட்டால் ஒரு முன்னேற்றமும் இருக்காது பொது இடங்களில் புகை பிடிக்க தடை போட்டார்கள் என்ன ஆச்சு. இதற்கெல்லாம் ஒரே வழி உற்பத்தி செய்யும் இடத்திற்கு தடை போடவேண்டும் அதை கண்காணிக்கவும் வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
20-மே-201813:00:25 IST Report Abuse
தமிழ்வேள் பிளாஸ்டிக்-ஐ முற்றிலும் ஒழிப்பது இயலாதது. மாறாக, உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கட்டாயமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேகரித்து அவற்றை பிளாஸ்டிக் உருண்டைகளாக [சிறு சிறு மிளகளவு] மாற்றி சாலை போடும்போது ஜல்லிக்கற்கள்,தார் உடன் சேர்த்து பிளாஸ்டிக் சாலைகளாக அமைக்கலாம். இதனால் சாலைகளின் தரம் மேம்படுவதுடன், நீண்டநாட்கள் சாலை உழைக்கும். ஒரு கால கட்டத்தில் பிளாஸ்டிக்குக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை வரும். இந்த மாதிரி கழிவு பிளாஸ்டிக் உருண்டைகள் தயாரிக்க தமிழகத்தின் அனைத்து பேரூராட்ச்சிகளுக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டன. சாலை அமைப்பதில் திருட இயலாமை.,கொள்ளை பணத்தின் அளவு குறைந்தமையால் இத்திட்டம் தெருவில் வீசப்பட்டது. தற்போது அத்தனை இயந்திரங்களும் உருப்படியில்லாமல் சீரழிந்து பேரீச்சம்பழத்துக்கு விற்கப்படும் அளவுக்கு சென்றுவிட்டது. இதுவே இன்றைய நிலை. பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழுங்கு படுத்தி மறு சுழற்சி சீரமைக்க படவேண்டும். அவ்வளவே. சில்லறை வசூல், கொள்ளை, திருட்டுக்கு வழி இல்லாததால், பிளாஸ்டிக் பயன்பாடு திசை திருப்பப்படுகிறது. நம்மைவிட பலமடங்கு பிளாஸ்டிக் பயன்படுத்தும் நாடுகளில் இந்த புகார் வரவில்லையே..ஏன்? கோளாறு நமது அமைப்புகளிடம். பிளாஸ்டிக்கின் பயன்பாட்டில் அல்ல..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X