கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : ரஜினி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : ரஜினி

Updated : மே 20, 2018 | Added : மே 20, 2018 | கருத்துகள் (76)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ரஜினி, குமாரசாமி ,கர்நாடகா ஆட்சி மாற்றம், பெண்களுக்கு முன்னுரிமை, ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டன்,  ரஜினி மக்கள் மன்ற மகளிரணி , ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி, ரஜினி மக்கள் மன்றம்,ரஜினி கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை , கர்நாடகா கூட்டணி ஆட்சி, Rajini, Priority for Women, Rajinikanth, Chennai poyes Gardens, Rajini makkal mandram,  Democracy,
Rajini Peoples Forum, Priority for Women in Rajni Party, Karnataka regime change, Kumaraswamy, Karnataka alliance rule,

சென்னை : கர்நாடகாவில் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்க உள்ளது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் ரஜினி மக்கள் மன்ற மகளிரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரஜினி மக்கள் மன்றத்திற்கு பெண்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. பெண்கள் இருக்கும் இடத்தில் நிச்சயம் வெற்றி இருக்கும். நான் துவங்க போகும் கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு ஏதாவது காரணம் இருக்கும்.
கட்சி துவங்கிய பிறகே கூட்டணி பற்றி பேச முடியும். கர்நாடக விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பிற்கு தலை வணங்குகிறேன். கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்க உள்ளது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. எடியூரப்பா பதவியேற்றது சரியானது அல்ல. காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்றியே ஆக வேண்டும். அணையின் கட்டுப்பாடு கர்நாடகாவிடம் இருப்பது சரியல்ல. ஆணையத்திடம் தான் இருக்க வேண்டும் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-மே-201802:53:23 IST Report Abuse
Mani . V எடியூரப்பா பதவியேற்றது ஜனநாயக படுகொலை என்று சொல்ல வேண்டியதுதானே? (நீந்தான் தைரியமான ஆளாச்சே, சொல்லு, எங்க சொல்லிப்பாரு).
Rate this:
Share this comment
Cancel
Krishna - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மே-201800:08:09 IST Report Abuse
Krishna ரஜனி அரசியலுக்கு சரியானவர் அல்ல. கர்நாடகாவில் அரசியல் பணநாயகம் ஜனநாயகம் அல்ல. அது பணநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.ரஜினி பயந்தான்கொள்ளி . அதுதான் மற்ற அரசியல் வாதிகளுக்கு பயந்து இது ஜனநாயகம் வெற்றி என்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
ஆ.சந்திரசேகரன் ரஜினி யின் கருத்து சரியல்ல, இதுபோன்ற கருத்துக்களின் மூலம் ரஜினி தமிழ் நாட்டுல் அரசியல் மாற்றத்தை விரும்பும் மக்களின் ஆதரவு நிச்சயமாக கிடைக்காது. கழகங்களைப்போன்ற கொள்கை யுடைய கட்சி வேண்டாம் என்பதே பெரும்பான்மை மக்களின் விருப்பம். சாதாரணமாக கர்நாடகத்துல் இக்கஊட்டணி அரசு அமைவதை வறவேற்கின்றேன், வாழ்த்துக்கள் என கூறியிருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Elangovan - Jacksonville,யூ.எஸ்.ஏ
20-மே-201817:58:40 IST Report Abuse
Elangovan ரஜினி கர்நாடகவில எதாவது நடந்த உடனே பொங்குற இந்தவேகம் தமிழர்கள் தமிழர்கள் காவிரி நீருக்கு போராடியபோது கருத்து சொல்லாம ஓடின
Rate this:
Share this comment
Cancel
ALL INDIAN BJP - singapore,சிங்கப்பூர்
20-மே-201817:41:17 IST Report Abuse
ALL INDIAN BJP கட்சி ஆரம்பிக்க துப்பு இல்ல கருத்து சொல்ல வந்துட்டான். நீயும் கட்சி தொடங்குவ தேர்தலில் நின்று ஒரு தொகுதியிலும் டெப்பாசிட் வாங்காம போவ அப்ப நாங்க சொல்லுவம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு விட்டது என்று......
Rate this:
Share this comment
Arasu - Ballary,இந்தியா
20-மே-201819:39:39 IST Report Abuse
Arasuசரி பெயரும் படமும் - உங்க கருத்துக்கு ஒத்து போகலேயே....
Rate this:
Share this comment
Cancel
kskmet - bangalore,இந்தியா
20-மே-201817:37:25 IST Report Abuse
kskmet கமலஹாசன்தான் கண்ணராவியாக பேசுவார் என்று நினைத்தேன். அதற்கு நான் எந்த விதத்திலும் சளைத்தவனில்லை என்று பேசுகிறாரே ரஜினி. பலே பலே சரியான போட்டி.
Rate this:
Share this comment
Cancel
malik - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-மே-201817:15:35 IST Report Abuse
malik ஆசையை துறந்தால் அகிலம் உனக்கு என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டும் மனம்கவர்ந்த நாயகன் எங்கள் சூப்பர் ஸ்டார்.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
20-மே-201817:14:04 IST Report Abuse
rajan அதெப்படி சாமி. கர்நாடக மக்களால் புறக்கணிக்க பட்ட இரு கட்சிகள் சேர்ந்து எண்ணிக்கை என்ற ஒன்றை வைத்து ஆட்சியை பிடித்து கொள்வதற்கு பேர் தான் ஜனநாயகமா. ஏன் இவர்கள் திறமையான எதிர்கட்சிகளாய் செயல் பட முடியவில்லை. ஏனென்றால் இந்த இருகட்சிகளுமே ஊழல் சாம்ராஜ்யத்தை வைத்து ஆட்சி பண்ணுவார்கள். ஏதோ நீங்க இந்த அரசியல் குட்டையில் மீன் பிடிக்கல்லே.
Rate this:
Share this comment
இட்லி நேசன் - Dublin,அயர்லாந்து
20-மே-201818:20:42 IST Report Abuse
இட்லி நேசன்அப்ப்டியே மேகாலயா, கோவா போன்றவற்றையும் திரும்பிப் பார்க்கவும்...
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
20-மே-201816:44:05 IST Report Abuse
vnatarajan ஏங்க யாரும் கை தட்ட மாட்டறீங்க. இனிமே ரஜினி கர்நாடகாவில் உள்ள தன் சொத்துக்களை விற்க நினைக்கவேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-மே-201816:18:22 IST Report Abuse
Malick Raja Vilalukkiratha neer ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை