இதே நாளில் அன்று| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : மே 21, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 இதே நாளில் அன்று

மே 22, 1944

வைகோ: நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டியில், வையாபுரி - மாரியம்மாள் தம்பதிக்கு மகனாக, 1944 மே 22ல் பிறந்தார். இவரது இயற்பெயர், கோபால்சாமி. தி.மு.க.,வில் இருந்தபோது, 1978 - 96 வரை, ராஜ்யசபா, எம்.பி.,யாக இருந்தார்.கடந்த, 1992ல், கருணாநிதியை கொல்ல முயன்றார் என, கொலை பழி சுமத்தி, தி.மு.க., விலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை, வைகோ துவக்கினார். இருமுறை, லோக்சபா, எம்.பி.,யாக பதவி வகித்தவர்.விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய குற்றத்திற்காக, 2001ல், 'பொடா' சட்டத்தில் கைது செய்யப்பட்டு, 19 மாதங்கள் சிறையில் இருந்தார். 2016, சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அந்த கூட்டணி, படுமோசமான தோல்வியை கண்டது. கூட்டணியில் இருந்து, வைகோ விலகினார். தற்போது, தி.மு.க.,விற்கு ஆதரவாக பேசி வருகிறார். அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gkrishna - chennai,இந்தியா
22-மே-201810:21:27 IST Report Abuse
gkrishna தன்னலம் அற்ற தலைவன். மிக சிறந்த போராளி . கடந்த கால சில முடிவுகள் குறித்து அவரை பற்றி குறை கூறினாலும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்
Rate this:
Share this comment
Cancel
Pandiyan - Chennai,இந்தியா
22-மே-201809:09:52 IST Report Abuse
Pandiyan தனக்கென எந்த அரசியல் அதிகார பதவிக்கும் ஆசைப்படாமல் ..இந்தவயதிலும் ..தமிழ்மக்கள் முன்னேற்றம் ...தமிழ்மக்கள் உரிமை ..போன்றவற்றிற்க்காக தினம் தினம் போராட்டத்திலே இருக்கும் வைகோ அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா
22-மே-201807:50:38 IST Report Abuse
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar இவரின் அதிகப்பிரசங்கியான பேச்சு, அவருக்கே குழிபறித்துக்கொள்வது உண்மையே? ஒரு தக்க பதவியிலிருந்து கொண்டு, உரிமைகளைக் கேட்காது, ஏதோவொன்றுக்காக வெளியிலிருந்துகொண்டு வக்காலத்து வாங்குவது ஆரோக்கியமான விடயமென என்னால் சொல்லிக்கொள்ள முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-மே-201806:35:19 IST Report Abuse
Bhaskaran தான் திமுகாவிலிருந்து வெளியேற்றப்பட்ட போது தனக்காக தீக்குளித்த வர்களின் தியாகத்தைக்கூட எண்ணாமல் ஸ்டாலினை முதல்வராகியே தீருவேன் என்று பல ராஜ தந்திர நடவடிக்கை ?கலீல் ஈடுபட்டுள்ளது அனைவர்க்கும் வியப்பைத்தந்துள்ளது
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
22-மே-201805:43:10 IST Report Abuse
Renga Naayagi எழுபத்தி ஐந்து வயசாகி விட்டது ..இனிமேலும் மீசைக்கும் தலைக்கும் கருப்பு சாயம் அடிக்க தேவையில்லை ..மரியாதையும் கூடும் ..
Rate this:
Share this comment
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
22-மே-201811:17:29 IST Report Abuse
Matt Pகருப்பு சாய தலையையே பார்த்து பழகியாச்சு. தீடீர்னுனு வெள்ளை தலையில் தெரிந்தால் மக்களுக்கு பார்க்கும்போது ஒரு பயம் வந்துவிடப்போகிறது. எஞ்சிய நாட்களிலும் கருப்பு தலையிலேயே காட்சியளிக்கட்டும் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை