ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: கண்காணிக்க தவறிய உளவுத்துறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: கண்காணிக்க தவறிய உளவுத்துறை

Updated : மே 23, 2018 | Added : மே 23, 2018 | கருத்துகள் (224+ 42)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Thoothukudi, TNJallianwalabagh,தூத்துக்குடி, மாவோயிஸ்ட்கள், உளவுத்துறை

துாத்துக்குடி: துாத்துக்குடி முற்றுகை போராட்டக்காரர்களுடன், மாவோயிஸ்ட் உள்ளிட்ட தீவிரவாத அமைப்பினர் ஊடுருவியிருப்பதை போலீசார் கண்காணிக்க தவறி விட்டதையே, நேற்றைய சம்பவம் உணர்த்துகிறது.
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், சில மாதங்களாகவே திசை மாறி வருகிறது. வழக்கமாக, அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் என்ற பெயரில் நடத்துவர். போலீசார், அவர்களை வாகனங்களில் ஏற்றி சென்று, மண்டபத்தில் வைப்பது வழக்கம். ஆனால்,ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குமரெட்டியாபுரம், மீளவிட்டான் என, 17க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரவியது. குறிப்பாக, புற்றுநோயால் குடும்ப தலைவர்களை இழந்த குடும்பங்களை ஒன்றிணைத்தனர்.

கடந்த, 100 நாட்களாக நடந்த போராட்டம், இதுவரை போராட்டத்தையே பார்த்திராதவர்களிடம் புதிய போக்கை ஏற்படுத்தியது. மேலும், தி.மு.க., - அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்திராமல் மக்கள் அதிகாரம், புரட்சிகர மக்கள் முன்னணி போன்ற தீவிர இடதுசாரி இயக்கங்கள், போராட்ட களத்தில் இறங்கின.

நேற்றைய துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில், ஜெயராமன், மக்கள் அதிகாரம் அமைப்பையும், தமிழரசன், புரட்சிகர மக்கள் முன்னணி அமைப்பையும் சேர்ந்தவர்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின், இளைஞர்களிடம் தீவிர இடதுசாரி அமைப்புகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்றைய சம்பவத்திலும், இத்தகைய அமைப்பினர் ஊடுருவியதை கண்காணிக்க, போலீசாரின் உளவுப் பிரிவுகள் தவறி விட்டன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (224+ 42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Salmiya,குவைத்
27-மே-201811:37:32 IST Report Abuse
Kumar ஒரு மாவோயிஸ்டும் கைது செய்யப்பட வில்லையே?... கட்டுக்கதை சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்..
Rate this:
Share this comment
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
27-மே-201813:39:40 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan)இறந்து போன உசிலம்பட்டி ஜெயராமன் தமிழரசன் எல்லாம் மாவோஇஸ்டுகள் தான்....
Rate this:
Share this comment
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
29-மே-201817:40:07 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingamமுதலில் எஸ் எல் ஆர் என்ற இயந்திர துப்பாக்கி எந்த ஆயுதமும் தரிக்காதவர்கள் மேல் பயன் படுத்தியிருக்கிறார்கள் .இ த்தோடு அவர்கள் போராட்டத்திற்கு வரமாட்டார்கள் என்ற மனநிலையும் சுட்டவர்களுக்கு இருந்திருக்கலாம் .. இதனை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும் நஞ்சை உமிழின் ஒரு கம்பெனி எப்படி இருப்பது ஆண்டுகளுக்கு மேலாக தாக்குப்பிடிக்க முடிந்தது... யாரெல்லாம் அதன் பின்னணியில் இருந்தார்கள் என்பதும் மக்களுக்கு தெரிய வேண்டும் அதன் பின்னர் நஸ்சல் கலை கவனித்து கொள்ளலாம்...
Rate this:
Share this comment
Cancel
yila - Nellai,இந்தியா
24-மே-201817:13:39 IST Report Abuse
yila அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.....
Rate this:
Share this comment
Cancel
rajesh m - Chennai,இந்தியா
24-மே-201810:04:29 IST Report Abuse
rajesh m எதற்கு எடுத்தாலும் இது தி மு க தூண்டுதல் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இறந்த ஒருவரின் வீட்டுக்கு சென்ற கீதா ஜீவன் ஐ ஒரு மணி நேரம் வீட்டிலே சிறை பிடித்தனர் எம் மக்கள். நாங்கள் எந்த கட்சி சார்பாகவும் போராடவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் எங்கள் குழந்தைகள் அனீமியா, சுவாச கோளாறு ஆகியவற்றால் படும் பாடு எங்களுக்கு மட்டுமே தெரியும். சுத்தமான காற்றும் நீரும் கேட்பது எங்கள் ஜனநாயக உரிமை. பதவிக்காக பிணந்தின்னும் ஈனப்பிறவிகளா. இதற்காகவா தூத்துக்குடி மண்ணில் பிறந்த எம் முன்னோர் வ.வு.சி, பாரதி, வாஞ்சிநாதன், கட்டபொம்மன் இது போன்ற இன்னும் பலர் உயிர் தியாகம் செய்து விடுதலை பெற்று தந்தனர். ஒரு தனியார் நிறுவனத்திற்காக சொந்த மக்களையே கொல்வதா? பசுவின் கன்றுக்காக தன் சொந்த மகனையே பலி தந்த ஆட்சியாளர்கள் இருந்த மண்ணில் இழி பிறவி நீயா? நல்ல பாடம் நடத்துவோம்.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
26-மே-201808:37:48 IST Report Abuse
Anandanஒரு முறையாவது ஸ்டெர்லிட் ஆலைப்பக்கம் சென்றிருந்தால் இப்படி பேச மாட்டார்கள்....
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
27-மே-201810:49:39 IST Report Abuse
Agni Shivaசுத்தமான காற்றும் தண்ணீரும் இல்லாமலா தூத்துக்குடி மக்கள் இருக்கிறார்கள்? தூத்துக்குடியில் யூரியா தொழில்சாலை, சிமெண்ட் தொழிற்சாலை, பெயிண்ட் தொழிற்சாலை என்று சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்கும் அநேக தொழிற்சாலைகள் இருக்கின்றன. இதை விட சாயப்பட்டறை, தோல் பதனிடும் தொழிற்சாலைகள் பல மடங்கு குடிநீரையும், தண்ணீர் ஊற்றுக்களையும், சுற்றுப்புறத்தையும், காற்றையும் மாசு படுத்துகிறது. ஆகவே திருப்பூரில் இருந்து அனைத்து ஜவுளி தொழிற்சாலைகளையும், ஆம்பூரில் இருந்து அனைத்து தோல் பதனிடும் தொழிற்சாலைகளையும் மூட சொல்லுவோமா? ஸ்டெர்லிட் தான் இந்த காற்று, மற்றும் தண்ணீர் மாசுபடுவதற்கு காரணம் என்றால் அந்த காரணங்களை நீதிமன்றத்தில் கொண்டு சென்று நிரூபிக்க எந்த சக்தி தடுக்கிறது? எவனோ கக்கி விட்ட பொய்களை தூக்கி பிடித்து மூக்கு சிந்தி நீனும் ஒரு அரைவேக்காடு என்று நிரூபிக்காதே. மாறாக உன்னிடம் இருக்கும் அறிவை பயன்படுத்தி அறிவு பூர்வமாக சிந்தி. விடை கிடைக்கும்....
Rate this:
Share this comment
Cancel
sam - Doha,கத்தார்
24-மே-201809:06:14 IST Report Abuse
sam idu enthavilthaliyum niyamaga theriya villai. yethavthu poratam yendral, udney theveravathigal udurivi vittathaga yentha vithathilum sariyaga theriavillai. arasangam yarukaga nadakirathu. makkaluka allathu corporate ika. yen ithuvarai makkalin porathirkana karanam therinthum, yen avargaludan pesavillai. namudaya naatirku civil services staff theveya. avargal makkalukakaga, makkaludaya varipanathil velai seibavargal. yivargal thangal velayai sariya seiyatha soolnilayil namakku evargal yellam theveya yendru thaan therigirathu
Rate this:
Share this comment
Cancel
Ganapathy - Bangalore,இந்தியா
24-மே-201809:04:55 IST Report Abuse
Ganapathy நூறு நாட்களை கடந்து செல்லும் போராட்டத்திற்கு ஏன் ஒரு நியாயமான பேச்சு வார்த்தை நடத்தவில்லை, போனமாசம், ஒரு அமைச்சர், ஸ்டெர்லிட் மூடுவது எங்கள் கையில் அல்ல, நீதிமன்றத்தின் கையில் உள்ளது என்று, கைவிரிக்கிறார், முதலில் மக்களின் உணர்வு என்ன என்று புரியவேண்டும், சிலசமயம் அந்த மக்களின் புரிதல் தவறாக இருக்கலாம்,அதை களைய அரசிடம் என்ன உத்தி உள்ளது,
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
27-மே-201810:54:54 IST Report Abuse
Agni Shivaஅமைச்சர் ஏன் கை விரிக்கிறார் என்பதையும் அவர் நீதிமன்றத்தை ஏன் கைகாட்டுகிறார் என்பதையும் புரிந்து கொள். ஏனென்றால் இந்த ஆலைக்கு எதிராக கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளும் தகுந்த ஆதாரம் இல்லாமல் உணர்ச்சி பூர்வமாக சொல்லப்படுபவைகள். இந்த ஆளை ஆட்களை கொல்லுகிறது என்று சொல்லி கொள்ளலாம்..ஆனால் அது உண்மையா எதனால் சாவு ஏற்படுகிறது என்பதை நிரூபி. ஆனால் இதை ஆலையினால் எந்த தண்ணீர் மாசோ, காற்று மாசோ ஏற்படவில்லை என்று சென்னை IIT தமிழன்கள் அடங்கிய நிபுணர்கள் குழு நடத்திய பரிசோதனைகள் கூட காட்டுகிறது. ஆதாரம் இல்லாமல் கூறும் குற்றசாட்டை நீதிமன்றம் எப்படிடா ஏற்கும்? அது நீ சொல்வதை கேட்டு மூக்கு சிந்த தயாராக இருக்காது. நீ கூறும் குற்றசாட்டுகளை ஆதாரங்கள் மூலம் நிரூபி....
Rate this:
Share this comment
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
27-மே-201813:52:21 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan)11 முறை பேச்சு வார்த்தை நடந்தது...
Rate this:
Share this comment
pius - Nagercoil,இந்தியா
28-மே-201818:02:09 IST Report Abuse
piusடேய் மொக்க சிவா, தென் ஆப்ரிக்காவில இருந்து பேசாத, தூத்துகுடில வந்து வாழ்ந்துப் பார் அப்ப தெரியும்...
Rate this:
Share this comment
Cancel
Laxmanan Mohandoss - ambur,இந்தியா
24-மே-201809:04:45 IST Report Abuse
Laxmanan Mohandoss Mismanagement from top to bottom resulted this tragic.
Rate this:
Share this comment
Cancel
24-மே-201809:00:48 IST Report Abuse
அரபிதாசன் இது தேசவிரோத தீவிரவாதிகளின் ஒத்திகை. இது பயங்கரவாதத்தின் அறிகுறி. தமிழக அரசு மக்களை பாதுகாப்பதில் மட்டுமல்ல காவலர்களின் பாதுகாப்பையும் அலட்சியப்படுத்துகிறது. சட்டம் ஒழுங்கை ஓட்டுக்காக விலை பேசலாமா?
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
24-மே-201808:46:48 IST Report Abuse
Ramaswamy Sundaram ஐயா அறிவாளிகள்...கடந்த 99 நாட்களாக அமைதியாக அறவழியில் ஆர்ப்பாட்டம் கோஷம் போடுதல் தர்ணா செய்தல் என்று நடந்து கொண்டு இருந்த போராட்டம் நாம் அனைவரும் அறிவோம்? அது எப்படி ஒரே நாளில் பேயாட்டம் ஆகியது> ? அறிவைக்கொண்டு யோசியுங்கள்...ஸ்டெர்லிட் ஆலையை மூடவேண்டும் என்பது சரியே...அதற்காக கலெக்டர் ஆபீசுக்கு தீ வைக்க வேண்டுமா? 127 வாகனங்களை கொழுத்த வேண்டுமா? போலீஸ் காரர்கள் தடை உத்தரவு இருக்கிறது களைந்து போங்கள் என்று மைக் வைத்துக்கொண்டு அறிவித்த பின்பும் கூட்டமாக சேர்ந்துகொண்டு அவர்கள் மீது கல்வீசி வேண்டுமா? அவர்களும் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு மனைவி மக்கள் குடும்பம் இல்லையா? நீங்கள் தீ வைத்து எரிக்கும்போது அவர்கள் அஹிம்சை முறையில் கையை கட்டிக்கொண்டு..புத்தம் சரணம் கச்சாமி என்று ஜபம் செய்யவேண்டுமா? அறிவாளிகள் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? நாதாரி கும்பல் கேணைத்தலைவர் திருட்டு ரயில் ஆட்சியில் நடந்த வன்முறை கலவரங்கள் போலீஸ் துப்பக்கிசூடு சட்டக்கல்லூரி கண்றாவி ஆகியவற்றை மறந்தீர்களா? அன்று அந்த அயோக்கிய பயல்கள் விதைத்ததை இன்று அறுவடை செய்கிறார்கள்...ஆகவே கழுவில் ஏற்றவேண்டியது இந்த குண்டர் கூட்டத்தை தான்
Rate this:
Share this comment
Cancel
Dhanraj Anagannan - Hosur, Tamilnadu ,இந்தியா
24-மே-201808:23:07 IST Report Abuse
Dhanraj Anagannan Now only the Press has informed this as intelligence failure. Pl. ask yourself first this qustions, why, what where, when and whom. The present police is inactive. They failed to get intelligence. During the year under Tr. W Davaram I.P.S. collected intelligence on the extremists activities. First the a police officer entered int the naxalite den with undaunted courrage without fearing for his life, brought out the extremist leader with minumum force. The extremist leader subsequewntly died. After 1982, the extremist activities were closed and Tamilnadu was peaceful when comparared to other states. NOW that it has started. The Tamilnadu govt. has to handful of few good officers, collect intelligence as well as to deal with such extremist.s.It is High time to think over. Dhanaraj.
Rate this:
Share this comment
Cancel
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
24-மே-201808:22:14 IST Report Abuse
அறிவுடை நம்பி ஹிட்லர் கூட இப்படித்தான் சொன்னான்.. அவனின் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடியவர்களை பற்றி..99 நாட்களாக நடந்த போராட்டத்தில் வராத மாவோயிஸ்டுகள் 100 வது நாள் தான் வந்தார்களா..அதற்கு முன்பே அவர்களால் வந்திருக்க முடியாதா. கதை சொல்வது காவல் துறைக்கு புதிது அல்ல. ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்த்து விட்டோம்..இப்போது தமிழகத்தைபொறுத்தவரை, தீவிரவாத மத்திய மாநில அரசுகளை எதிர்த்து ஜனநாயக வாதிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.. ஜனநாயகம் என்ற பெயரில் பயங்கரவாதிகள் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை