விஷமிகள் தூண்டுதலால் கலவரம்; முதல்வர் பழனிசாமி திடீர் விளக்கம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
விஷமிகள் தூண்டுதலால் கலவரம்
முதல்வர் பழனிசாமி திடீர் விளக்கம்

சென்னை:''துாத்துக்குடியில், சில விஷமி களும், சில அரசியல் கட்சி தலைவர்களும், சுயநலத்திற்காக, அப்பாவி மக்களை பயன்படுத்தி, மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளனர்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

 விஷமிகள்,தூண்டுதலால்,கலவரம்,முதல்வர்,பழனிசாமி,திடீர் விளக்கம்


சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:ஜெயலலிதா இருந்த போது, 2013 மார்ச், 29ல், 'ஸ்டெர்லைட்' ஆலையை மூட, மின் இணைப்பை துண்டித் தார். ஆனால், தேசிய பசுமை தீர்ப்பாயம், மின் இணைப்பு வழங்கவும், ஆலையை தொடர்ந்து நடத்தவும், சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.


அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், ஜெ., மேல்முறையீடு செய்தார். தற்போது, அந்த வழக்கு நடந்து வருகிறது. ஏப்ரல், 9ல், ஆலையை தொடர்ந்து இயக்க, அனுமதி கோரி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம்,

ஆலை நிர்வாகம் விண்ணப்பித்தது; அதை, அரசு நிராகரித்தது. மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவில், ஆலைக்கு வழங்கும் மின் இணைப்பு, நேற்று துண்டிக்கப்பட்டுள்ளது.


வேண்டுமென்றே, சில எதிர்க்கட்சியினரும், சில இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், அப்பாவி மக்களைதுாண்டிவிட்டு, இப்படி போராட்டத்தை நடத்துகின்றனர். அரசு சார்பில், நான்கைந்து மாதங்களாக, கலெக்டர், சப் - கலெக்டர் ஆகியோர், 14 முறை, போராட்டக்காரர்களை அழைத்து பேசி, அரசு எடுத்த நடவடிக்கையை விளக்கமாக தெரிவித்து உள்ளனர்.


இதற்கு முன், அறவழியில் போராட்டம் நடத்தினர். இம்முறை வேண்டுமென்றே, சில எதிர்க்கட்சிகள் துாண்டுதலால், சில சமூக விரோதிகள் ஊடுருவி, அப்பாவி மக்களை பயன்படுத்தி, இந்த அரசுக்கு நெருக்கடி கொடுக்க போராட்டத்தை மோசமான சூழ்நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட, சட்டப்படி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. துாத்துக்குடிக்கு, நாங்கள் செல்லவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு.


அங்கு, 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. முதலில், சட்டத்தை மதிக்க வேண்டும்; அமைதி திரும்ப வேண்டும்; மக்கள் அச்சமின்றி வாழ வேண்டும்.ஊர்வலம் வந்தவர்கள், காவல் துறையினரை தாக்கியதும், போலீசார் கண்ணீர்

Advertisement

புகை வீசினர்; பின், தடியடி நடத்தினர். அதை யும் மீறி, கலவரக்காரர்கள், கலெக்டர் அலுவலகத்தில் புகுந்து, வாகனங்களுக்கு தீ வைத்தனர். ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடி யிருப்பில் புகுந்து, வாகனங்களை கொளுத்தி னர். இதனால், இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்பட்டது.


ஒருவர் அடிக்கும் போது, அடிபடுபவர் தடுப்பது இயற்கை. இச்சம்பவம் திட்டமிட்டு செய்யப் படவில்லை. கலவரம் ஏற்படும் என தெரிந்து இருந்தால், முன்னெச்சரிக்கையாக கைது செய்திருப்பர். ஒவ்வொரு முறை போராட்டம் நடந்தபோது, அமைதியாக நடந்தது.


அவர்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப் பட்ட பின்னரும், சில சமூக விரோதிகள் ஊடுருவி, தவறான பாதையில் அழைத்து சென்றதால், இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kandhan. - chennai,இந்தியா
26-மே-201817:29:58 IST Report Abuse

kandhan.அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி உங்கள் மதிப்பை காப்பாற்றிக்கொள்ளலாம் இல்லையென்றால் மக்கள் மன்றத்தில் நீங்கள் மன்னிப்பு கேட்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு கந்தன் சென்னை

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26-மே-201800:14:08 IST Report Abuse

Mani . Vஇந்த செய்தி முற்றிலும் தவறு.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
25-மே-201821:49:33 IST Report Abuse

Nallavan Nallavanஅடப்பாவமே விஷமிகள் என்று உண்மையைப் போட்டுடைத்து விட்டீரே ?? சிறுபான்மை வாக்குகள் உங்களுக்கு வேண்டாமா ? விஷமிகள் கூட்டத்தில் கலந்திருந்தார்கள் என்ற ஞானத்தை சுடப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு அறிவித்தீரே ..... அப்பொழுது பெறவில்லையா ?

Rate this:
Anandan - chennai,இந்தியா
26-மே-201808:27:48 IST Report Abuse

Anandanஇதே போல் குஜராத்தில், பஞ்சாபில் கலவரம் நடந்த போது விஷமிகள் இல்லை? தமிழ்நாட்டில் மட்டும் விஷமிகள் என்று விஷக்கிருமிகளை புலம்புவது வாடிக்கையாகி போயிற்று அதனால்தான் இன்னும் தமிழ்மக்கள் அந்த கிருமிகள் மீது வெறுப்பாகவே உள்ளனர்....

Rate this:
malik - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-மே-201821:18:29 IST Report Abuse

malikபிரிவினை வாத பாதிரி படை தமிழகத்தை தமிழ் ஈழம் போல் மாற்றாமல் விட மாட்டார்கள்.அப்புறம் நார்வே அமைதி குழு (உண்மையில் குழப்பவாதி குழு ) வாடிகன் போன்றவை உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் அளவுக்கு நிலைமை படுமோசமடையும்.பிரித்தாளும் சூழ்ச்சியின் துயரமான முடிவுதான் பிரிவினை.இந்த சூழ்ச்சியில் இஸ்லாமியர்களை கேடயமாக பலியாடுகளாக மாற்ற முயற்சி நடக்கிறது.முஸ்லிம்களிடம் இந்த சித்து வேலைகள் எடுபடாது.எங்களுக்கு தெரியும்.படித்த பண்புள்ள நிதானமான சிந்திக்கும் திறனுள்ள முற்போக்கு இஸ்லாமியர்களை நீங்கள் தனிமைப்படுத்தி புறக்கணிப்பீர்கள் என்று.உங்கள் தலைவி இத்தாலிய ஜீன் நாடே போற்றும் அப்துல் கலாமை எந்த அளவுக்கு உதாசீனப்படுத்தினார் என்பது ஊரறிந்த விஷயம்.தெளிவான திட்டமிடல் இல்லாத தான் தோன்றி தனமான முரட்டு சுபாவம் உள்ள இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கிவிட்டு வேடிக்கை பார்ப்பதும் உங்களுக்கு கைவந்த கலைதான்.பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் துரோகத்தில் உங்களை யாரும் மிஞ்ச முடியாது

Rate this:
rajan - chennai,இந்தியா
25-மே-201820:40:27 IST Report Abuse

rajanஇந்த தொழிற்சாலை எப்போ வந்தது ? மத்தியில் தமிழ்நாட்டில் யார் ஆட்சி செய்தார்கள் ? எதற்கும் பி ஜே பி கட்சியை குறை கூறி பிழைப்பது தப்பு. இப்படியே எல்லா தொழிற்சாலைகளையும் மூடுவது நல்லதல்ல ..கூடங்குளம் பவர் நிலையம் பத்து வருஷமா கட்டி முடிக்கற வரைக்கும் காத்திருந்து...பின் மூட நடந்த போராட்டம் மறக்க முடியவில்லை ..அந்த மின்சக்தியை இப்போ அதே தமிழ்நாடு அனுபவிக்கறது..தங்கள் ஆட்சியில் அனுமதி கொடுத்துவிட்டு அதையே எதிர் கட்சியானபோது எதிர்கிறது மக்களை வேதனை படுத்துவது ..இன்று பொழுதுபோக்காகி விட்டது

Rate this:
Anandan - chennai,இந்தியா
26-மே-201808:29:40 IST Report Abuse

Anandanஆலையை மூட சொன்னா எப்போ ஆரம்பித்தது அப்போ யாரு ஆட்சின்னு முட்டாத்தனமா கேள்வி கேட்டால் அவன் சங்கீ. ஏன், அந்த ஆட்சியாளர்களை ஆட்சியில் உட்கார வைத்து அவர்களை இந்த தொழிற்சாலையை மூட சொல்ல போகிறாயா? ஏன் இப்படி அறிவிலித்தனமான கேள்வி?...

Rate this:
JANANI - chennai,இந்தியா
25-மே-201816:44:23 IST Report Abuse

JANANIethir katchikalin suyanalam....ivllo periya kalavarama maari irukku

Rate this:
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
25-மே-201814:58:22 IST Report Abuse

Needhiyin Pakkam Nil உரிமைக்காக போராடுபவர்களை நகர்ப்புற நக்சலைட்டுகள் என்று மீடியாக்களை வைத்து கார்ப்பரேட் அரசுகள் முத்திரை குத்தும். வாய் மட்டும் தான் எடப்பாடியோடது ஆனால் வார்த்தைகள் எல்லாம் மோடிஜி எழுதி கொடுத்தது தான்.....

Rate this:
Kansami Ponsami - Thoothukudi,இந்தியா
25-மே-201813:58:07 IST Report Abuse

Kansami Ponsamiவிஷமிகள் எல்லாம் புறவாசல் வழியாக வந்த காவிகளை தவிர வேறு யாரும் இல்லை...

Rate this:
வல்வில் ஓரி - koodal,இந்தியா
25-மே-201815:20:57 IST Report Abuse

வல்வில் ஓரிஇந்த ரெகார்டை மாத்தவே மாட்டியாடா கன்சாமி... ஹையோ...ஹையோ.....

Rate this:
bal - chennai,இந்தியா
25-மே-201820:35:00 IST Report Abuse

balகந்தசாமி முனிசாமி....நீ பொய் சொல்லாதே...நீ போய் பார்த்தாயா......

Rate this:
Anandan - chennai,இந்தியா
26-மே-201808:30:24 IST Report Abuse

Anandan//இந்த ரெகார்டை மாத்தவே மாட்டியாடா கன்சாமி... ஹையோ...ஹையோ.....// அருமையான புலம்பல்....

Rate this:
anand - coimbatore,இந்தியா
25-மே-201812:45:48 IST Report Abuse

anandமிகவும் வருத்தமாக உள்ளது. இன்று நாம் கருத்து சொல்லிகொண்டுவருகிறோம்.. இதே நிலைமை தான் நாளை நமக்கும்.. இன்று பொது மக்கள் போலீஸ் மீதும் .. போலீஸ் பொது மக்கள் மீதும்.. முதல் அமைச்சர் வேரு யார் மீதோ பழி போடுகிறார்கள். பொது மக்கள் அமைதியாக போராடினால் யாரும் விரும்புவது இல்லை. வன்முறையை தூண்டி அதில் லாபம் தேடி கொள்கிறார்கள்.. இந்த உலகிலே நியாமாக போராடினால் மரணம் நிச்சயம்... போராடும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். தனிமனித ஒழுக்கம் இல்லாவிட்டால் தோல்வி நிச்சயம். அதிகாரவர்கத்திற்கு முன்னால் மிகவும் கவனமாக செயல்படவேண்டும்.....எதை வேண்டுமானாலும் செய்வார்கள்....

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
25-மே-201812:21:26 IST Report Abuse

ganapati sbதமிழக அரசு எதிர்த்தும் நீதிமன்றத்தின் உதவியால் செயல்படும் ஆலையை தகுந்த சுற்றுசூழல்கள் சீர்கேடுகள் குறித்த சான்றுகளை நீதிமன்றத்தில் கொடுத்துதான் மூடமுடியும் தங்களிடம் தகுந்த சான்றுகள் இருந்தால் போராட்டம் செய்பவர்கள் வன்முறை தவிர்த்து வழக்கு தொடுத்து வெற்றி பெற வேண்டும் இதுவே ஜனநாயக நடைமுறை வன்முறை தொடர்ந்தால் சட்டம் ஒழுங்கை காக்க அரசாங்கமும் பலப்ரயோகம் செயும் என்பது இயல்பே

Rate this:
Anandan - chennai,இந்தியா
26-மே-201808:33:22 IST Report Abuse

Anandanஅப்பவும் அரசுகள் இதில் எதுவும் செய்யாது என்று உங்கள் சங்கி கொள்கையை இங்கு விளக்கிவிட்டீர்கள். அரசு எதுவும் மக்களுக்கு நன்மை செய்யாது ஆனால் மக்களை கொல்லும் அருமை. உங்களிடம் ஆட்சியை கொடுத்த மக்களை சொல்லணும். அரசு தொழிற்சாலையை நடத்த அனுமதி கொடுக்கும் அதில் தவறென்றால் மக்கள் தகுந்த ஆதாரங்களுடன் வழக்கு தொடுத்து அதை மூடனும். அடேய், இவ்வளவுதான் உங்கள் அறிவா. இவனுங்க சொல்றதுதான் ஜனநாயகமாம் இப்போ தெரியுது ஏன் பெரியார் இவளவு புகழ் பெற்றார் இங்குனு இப்போ....

Rate this:
மேலும் 54 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement