பல்கலை பட்டமளிப்பு விழா மம்தாவுடன் பங்கேற்ற மோடி Dinamalar
பதிவு செய்த நாள் :
பல்கலை பட்டமளிப்பு விழா
மம்தாவுடன் பங்கேற்ற மோடி

கோல்கட்டா:மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், அம்மாநில முதல்வர், மம்தா பானர்ஜியுடன், பிரதமர் நரேந்திர மோடி, விஸ்வ பாரதிபல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.

 பல்கலை பட்டமளிப்பு விழா மம்தாவுடன் பங்கேற்ற மோடி


மேற்கு வங்கத்தில்,திரிணமுல், காங்., தலைவர்,மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தலைநகர், கோல்கட்டாவில், நோபல் பரிசு பெற்ற, மறைந்த கவிஞர், ரவீந்திரநாத் தாகூரால் உருவாக்கப்பட்ட,

விஸ்வபாரதி பல்கலை பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.இந்த விழாவில், பல்கலை வேந்தரான, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மம்தா பானர்ஜி, அண்டை நாடான, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


பிரதமர் மோடி பேசுகையில், ''மறைந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், இந்திய மாணவர்கள், உலகளாவிய கண்ணோட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என விரும்பினார். இந்திய அடையாளத்துக்கு எப்போதும் முன்னுரிமை அளித்தவர்,'' என்றார்.மேலும், மாணவர்களுக்கு போதிய குடிநீர் வசதி செய்யப்படாததற்கு, மோடி மன்னிப்புகேட்டார்.


இதற்கு முன், 2008ல், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, விஸ்வ பாரதி பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.அதேபோல், இந்த பல்கலை பட்டமளிப்பு விழாவில், மாநில

Advertisement

முதல்வர் பங்கேற்பது அபூர்வ நிகழ்வாக கருதப்படுகிறது.இதற்கு முன், 1972 - 77ல், மேற்கு வங்க முதல்வராக இருந்த, காங்.,கை சேர்ந்த சித்தார்த்த சங்கர் ரே, விஸ்வ பாரதி பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உள்ளார்.பிரதமர் மோடியை, மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்த விழாவில், இருவரும்பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish Sami - Trivandrum,இந்தியா
26-மே-201812:42:10 IST Report Abuse

Krish Samiமம்தா & மோடி ஒரே மேடையில், ஸ்டாலின் & பன்னீர்செல்வம் பார்த்து சிரித்துக்கொண்டார்கள் என்பதெல்லாம் கேரளத்துக்கு வெளியே இருப்பவர்களுக்கு வியப்பாகத்தான் இருக்கும். இங்கே ஆளும் கட்சி தலைவர்களும் எதிர்கட்சி தலைவர்களும் பொதுவெளியில் சந்திக்கும் பொழுது நாகரீகமாகவே நடந்து கொள்வார்கள். ஜெயலலிதா இறந்த சமயம், இறுதி அஞ்சலி செலுத்த போகும் பொழுது அவர்கள் ஒரே காரில் சென்றதையும் நாம் அறிவோம். பக்கத்து மாநில முதல்வர் ஜெயலலிதாவுக்குகாக கேரளம் முழுவதும் ஒரு நாள் அரசு துக்க தினம் அறிவித்த நாகரீகமும் இங்கே உண்டு. உடனே எதிர்க்கட்சி அதை எதிர்த்து கொடி பிடிக்கும் அவலமும் இங்கே கிடையாது. இங்கே பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. but, you see a level of civilisation here. மற்ற மாநிலங்களும் ஏன், மற்ற நாடுகளும் இங்கே படிக்க ஏராளம் உண்டு.

Rate this:
srini - chennai,இந்தியா
26-மே-201810:40:34 IST Report Abuse

sriniகந்தன் அவர்களுக்கு ஆரியர் எப்போது எங்கிருந்து வந்தார்கள். இது பற்றி எங்கே சொல்லப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் தான் இந்த மதத்திற்கு இந்து மதம் என்று பெயர் வைத்தார்கள் என்ற விவரத்தை நீங்கள் அநேகமாக தெய்வத்தின் குரலில் காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னதை தான் சொல்லி இருப்பேர்கள் என்று எண்ணுகிறேன். அவர் அடுத்த பாராவில் ஏன் இந்த மதத்திற்கு பெயர் வைக்கவில்லை என்ற காரணத்தையும் கூறி இருப்பாரே அதை ஏன் படிக்கவில்லை. புத்த, ஜைன மதங்கள் தோன்றுவதற்கு முன் என்ன இருந்தது? புத்தரின் முன்னோராகள் எந்த மதத்தை பின்பற்றினார்கள்? இன்றைய தேதிக்கு தொல்காப்பியம் தான் தமிழில் தோன்றிய முதல் நூல் என்று எல்லோரும் ஏற்று கொண்டுள்ளார்கள். (அதற்கு முன் தோன்றிய நூல்கள் கிடைக்க பெறாததால்). அந்த நூலில் ஆரியர்களின் தெய்வங்கள் என்று திராவிட கட்சியினரால் சொல்லப்பட்ட விஷ்ணுவும் இந்திரனும் தமிழர்களின் ஐவகை நிலங்களில் வணங்கப்பட்ட தெய்வங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது. அப்படியானால் அந்த இரண்டு நில மக்களும் தமிழர்கள் இல்லையா?

Rate this:
Krish Sami - Trivandrum,இந்தியா
26-மே-201812:48:49 IST Report Abuse

Krish SamiSrini, what you say is sensible. But, will not have any impact on 'brain-washed' people....

Rate this:
vadivelu - chennai,இந்தியா
26-மே-201813:56:07 IST Report Abuse

vadiveluwell said....

Rate this:
Raman - Chennai,இந்தியா
26-மே-201810:20:49 IST Report Abuse

RamanMr Anbu...your comments reflect the mindset of anti-national group of people. Go to school and get some education before writing comments in the established news magazine. No one will cry if you do not put a comment.

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X