சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்

Updated : மே 26, 2018 | Added : மே 25, 2018 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்

புதுடில்லி, :சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட, மத்திய அமைச்சர், அருண் ஜெட்லி, 65, அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் உடல் நிலை தேறி வருவதாக,மருத்துவர்கள் கூறிஉள்ளனர்.பா.ஜ.,வை சேர்ந்த மூத்த தலைவரும், நிதியமைச்சராக இருந்த வருமான, அருண் ஜெட்லி, சிறுநீரக கோளாறு காரணமாக, டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு, 14ல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அதன் பின், அவர் உடல்நிலையை, மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு, உன்னிப்பாக கவனித்து வந்தது. அருண் ஜெட்லியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, நேற்று, அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.அருண் ஜெட்லிக்கு, துாரத்து உறவினரான ஒரு பெண், சிறுநீரகம் தானம் செய்ததாக, எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.இது குறித்து, மருத்துவர் ஒருவர் கூறுகையில், 'சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, அவர் மீது பிரியம் உள்ள நண்பர், உறவினர், பக்கத்து வீட்டுக்காரர் என, யாரும், சிறுநீரகம் தானம் அளிக்கலாம்' என்றார்.அருண் ஜெட்லி வகித்து வந்த நிதித்துறையை, தற்போது, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் கூடுதலாக கவனித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
26-மே-201817:01:37 IST Report Abuse
K. V. Ramani Rockfort நல்ல செய்தி, விரைவில் பூரண உடல் நலத்துடன், பணியில் அமர்ந்து மீண்டும் அவர் இந்த நாட்டுக்கு சேவை செய்ய வேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - trichy,இந்தியா
26-மே-201816:24:18 IST Report Abuse
மணிமாறன் நிதி மந்திரியாக இருந்தாலும் பிரதம மந்திரியாக இருந்தாலும் கடவுள் நீதி தவற மாட்டார்.... குறிப்பாக ராம பிரான்...
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
26-மே-201813:45:36 IST Report Abuse
தமிழர்நீதி தேசத்தை சீரழித்த இந்த சீக்காளி அப்படியே வீட்டுக்கு போனால் தேசம் தப்பிக்கும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X