அந்தமானில் துவங்கியது தென்மேற்கு பருவமழை: கணித்தபடி ஒரு வாரத்திற்கு முன் வந்தது Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அந்தமானில் துவங்கியது தென்மேற்கு பருவமழை
கணித்தபடி ஒரு வாரத்திற்கு முன் வந்தது

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை அந்தமானில் நேற்று துவங்கியது. கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் 'வரும் 30 வரை மீனவர்கள் கடலுக் குள் செல்ல வேண்டாம்' என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

அந்தமானில்,துவங்கியது,தென்மேற்கு,பருவமழை,கணித்தபடி,ஒரு வாரத்திற்கு,முன், வந்தது


ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ல் தென்மேற்கு பருவமழை துவங்க வேண்டும். ஆனால் ஒரு சில ஆண்டுகளில் ஓரிரு நாட்கள் முன்னதாக வோ அல்லது பின்னதாகவோ மழை துவங்கும். இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக மே 23ம் தேதியே பருவமழை துவங்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனால் அரபிக்கடலில் 'மேகுனு' புயல் உருவான தால் கடல் சூழல் மாறி பருவமழை தள்ளிப்போனது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் பருவமழை துவங்குவதற்கு சாதகமான சூழல் உருவானது. அதற்கேற்ற வகையில் தென்மேற்கு பருவமழை நேற்று துவங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:



தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் பகுதி யில் துவங்கி உள்ளது. தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் நாளை முதல் மழை பெய்யத் துவங்கும்.இதனால் அரபிக்கடலின் தென்பகுதி, கன்னியாகுமரி, மாலத்தீவு, தெற்கு வங்கக்கடல், லட்சத்தீவு, கடலோர கர்நாடகா மற்றும் கேரளாவில் பலத்த காற்று வீசும்; கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும்.


எனவே மீனவர்கள் வரும் 30ம் தேதி வரை இந்த குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.இன்றைய வானிலையை பொறுத்தவரை தென் மாவட்டங் களில் பெரும்பாலான இடங்களிலும், வட மாவட்டங்களின் உள் பகுதியிலும் மேல்

Advertisement

அடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை வானம் மேக மூட்டமாககாணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


நேற்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருவையாறு, சத்திரப்பட்டியில் 8 செ.மீ., மழையும்; திருச்சுழி, கமுதி, காரைக் குடி 7; திருப்புவனம், கடலாடி, பேரையூர், சிவகங்கை 6; திருக்காட்டுப்பள்ளி, சாத்துார், திருப்பத்துார், செங்கம், ராசிபுரம், அரிமளம், மேலுார், பரமத்தி வேலுார் 5 செ.மீ., மழையும் பெய்துள்ளது. கடவூர், சிட்டாம்பட்டி, விருதுநகர், பஞ்சம்பட்டி, நீடாமங்கலம், சோழவந்தானில் 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

ஐந்தாண்டுகளில் முதல் முறை

கடந்த 2013 - ஜூன் 1; 2014 - ஜூன் 6; 2015 - ஜூன் 5; 2016 - ஜூன் 8 மற்றும் 2017 - மே 30ல் தென் மேற்கு பருவமழை துவங்கியது. 5 ஆண்டு களில் இல்லாத வகையில், இந்த ஆண்டுஜூன் 1க்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே துவங்கியுள்ளது. - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
26-மே-201818:41:56 IST Report Abuse

Loganathan Kuttuvaதென் மேற்கு பருவமழையினால் தமிழகத்திற்கு தண்ணீர் அதிகம் கிடைப்பதில்லை. ஆனால் காற்றாலைகள் இயங்கி மின்சாரம் கிடைக்கும் காற்று மட்டும் வீசுவதால்.

Rate this:
Hari Bojan - Ootacamund (Ooty),இந்தியா
26-மே-201813:26:33 IST Report Abuse

Hari Bojanமழை வந்ததும் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது மகிழ்ச்சியினை தரும் வேளையில், நீலகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை குறித்து தங்களது பத்திரிக்கையில் செய்தி வராதது ஏமாற்றத்தினை அளிக்கின்றது

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-மே-201808:31:31 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇந்த ஆண்டுஜூன் 1க்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே துவங்கியுள்ளது. எனினும் நீர்நிலைகள் நிரம்பினால் ஒரு மூன்று மாதத்திற்கு குடிநீர் பிரச்சினை இல்லாமல்இருக்கலாம். இல்லை என்றால் திராவிடர்கள் நீர் கொண்டுவருகிறேன் என்ற சாக்கில் டேங்கர் வாடகை, டிரைவர் வாடகை, நீரின் விலை என்று கஜானாவை காலி செயது விடுவதோடு. ஏதோ ஒரு வகையில் சுத்தமில்லாத நீரை கொண்டுவந்து கொடுத்தது மக்களுக்கு வியாதியை கொடுத்து அதன் மூலம் அவர்கள் கட்டியுள்ள மருத்துமனைகளுக்கு காசை பார்ப்பார்கள்..

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X