மறியலால் மக்களுக்கு இம்சை Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மறியலால் மக்களுக்கு இம்சை

துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வை கண்டித்து, சென்னையில் பல்வேறு இடங் களில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், சாலை மறியல், கடை யடைப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதனால், வார நாளான நேற்று, ஊழியர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

 மறியலால்,மக்களுக்கு,இம்சை


தி.நகர் பேருந்து நிறுத்தம் அருகே, தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், சாலை மறியலில் ஈடுபட்டனர். கோடம்பாக்கம் - ஆற்காடு சாலையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வம் தலைமையில், 70 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


வியாசர்பாடி, அம்பேத்கர் கல்லுாரி எதிரில், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போலீசார், அவர்களை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


ஆர்.கே.நகர், வைத்தியநாதன் மேம்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட, 100க்கும் மேற் பட் டோர், கைது செய்யப்பட்டு, தண்டையார் பேட்டை, நேதாஜி நகர், வியாபாரி சங்க

மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.சென்னை புறநகர் பகுதிகளான, தாம்பரம், சேலையூர், பெருங்களத்துார், செம்பாக்கம், சிட்லபாக்கம், ஆகிய பகுதிகளில் நேற்று, பெரும் பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.


தாம்பரம் பேருந்து நிலையம் அருகே, தாம்பரம் தொகுதி, எம்.எல்.ஏ., ராஜா தலைமையில், ஜி.எஸ்.டி சாலையில் மறியல் போராட்டம் நடந்தது.புறநகர் பகுதிகளான, குரோம்பேட்டையில், பாதிக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.


பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், பொழிச்சலுார், பூந்தமல்லி பகுதிகளில், பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின. ஓட்டல்கள் மூடப்பட்டதால், வெளியூர் களில் இருந்து வந்த தொழிலாளர்கள், உணவு இன்றி சிரமப்பட்டனர்.குரோம்பேட்டை பேருந்து நிலையம், சிக்னல் ஆகிய இடங்களில், தி.மு.க., கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இதனால், ஜி.எஸ்.டி., சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதேபோல், பூந்தமல்லி பேருந்து நிலையம், காட்டுப்பாக்கம் ஆகிய இடங்களிலும் சாலை மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்டோரை, போலீசார் கைதுசெய்தனர்.


மணக்கோலம்:வட சென்னையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனை அருகே, சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, அதே பகுதியில் உள்ள,

Advertisement

தனியார் திருமண மண்டபத்தில், புது வண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டத்தைச் சேர்ந்த, பாரி - தமிழரசி ஆகியோரின் திருமணம் நடந்தது. போராட்டத்தின் போது, உயிரிழந்த வர்களுக்கு, மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவொற்றியூர், தேரடி சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டோரை, போலீசார் கைது செய்தனர்.


காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 50க்கும் மேற்பட்ட, நாட்டு, பைபர் படகுகளில், கறுப்புக்கொடி ஏற்றி, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில், மீனவர்கள் ஈடுபட்டனர். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நடந்த சாலை மறியல் போராட்டங்களால், பொதுமக்கள் அவதியடைந்தனர். பல இடங் களில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.வார நாளான நேற்று, ஊழியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல், அவதி அடைந்தனர். கடை அடைப்பு காரணமாக, வணிகர்களும், பொதுமக்களும் பாதிப்பு அடைந்தனர்.


- நமது நிருபர் குழு -


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JIGMONEY - Chennai,இந்தியா
26-மே-201821:20:20 IST Report Abuse

JIGMONEYAny action or protest made by people should always protect people and public property. Giving hindrance between people by ruling are opposition both are not accep. Should learn a lot. Dr.K.K. JIGMONEY. COM

Rate this:
vadivelu - chennai,இந்தியா
26-மே-201820:43:22 IST Report Abuse

vadiveluகருத்துக்களை பார்க்கும்போது மக்கள் விழித்து கொண்டு விட்டார்கள் என்றே தெரிகிறது. இது மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.தேவை இன்றி போராட்டம் நடத்தினால் பொது மக்கள் கருது எழுதியாவது காரி துப்ப வேண்டும்.கூவம் நாறுகிறது, மணலி ரப்பர் புகை நாற்றம் அடிக்கிறது, ஈரோடு தரை நீர் மாசு பாட்டு இருக்கிறது .இவையெல்லாம் தெரியவில்லை, நிறுத்தி வைக்க பட்டுள்ள ஆலைக்கு எதிராக சாதி செய்து அப்பாவி மக்களை காவு கொடுத்து விட்டனர். நீட்டுக்கு ஒரு அனிதா, இங்கே ஒரு பதிமூன்று அப்பாவிகள். கருத்துக்கள் இல்லாததை தவறாக புரிந்து கொண்டு மேலும் மேலும் தேவையில்லா போராட்டங்களை செய்கிறார்கள். மக்கள் அதிக அளவில் விஷமிகளின் தோலை உரித்து காட்ட வேண்டும்.

Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
26-மே-201818:49:57 IST Report Abuse

elakkumananமக்கள் சுயமாக எந்த காலத்திலும் திமுகவை ஆட்சி பீடத்தில் அமர விட்டதில்லை. இந்த சொடலை, செயல் தலைவன் மாதிரி தெரியல. தற்செயல் தலைவன் மாதிரி, தற்குறி தலைவன் மாதிரி நடக்குறாரு. எனக்கு என்னவோ, யாரோ தலைக்கு செய்வினை வச்சுபோட்டானுங்கன்னு தோணுது. அவங்க நைனா ஸ்டையிலுல சொல்லனும்னா ஜமுக்காலத்தில் வடிகட்டிய முட்டாள்தனம். தற்கொலய ஏம்பா தடுக்கிறீங்க. நம்ம மக்களை முழுசா நம்ப முடியாது. அதுனால, செயலின் தற்கொலை போராட்டங்கள் உடனடி தொல்லை ஆனால், நிரந்தர விடுதலை. இப்பிடியே ஒழியட்டும்.

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X