தூத்துக்குடியில் ஓய்ந்தது : போராட்டம் நிம்மதி! Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
TN Jallianwala Bagh ,Tuticorin Riot, Sterlite protest, தூத்துக்குடி போராட்டம், மக்கள் நிம்மதி , ஸ்டெர்லைட் எதிர்ப்பு, தூத்துக்குடி கலவரம், ஸ்டெர்லைட் ஆலை, சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஸ்டெர்லைட் போராட்டம்,  தூத்துக்குடி துப்பாக்கி சூடு,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை,, Tuticorin protest,   Sterlite Plant, Law and Order Problem, Tuticorin Firing, , Tuticorin Sterlite Plant,

துாத்துக்குடி:துாத்துக்குடியில், மூன்று நாட்களாக நடந்த போராட்டங்கள் ஓய்ந்து, நேற்று இயல்பு நிலை திரும்பியது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்தனர். 'ஸ்டெர்லைட் எதிர்ப்பு' என்ற போர்வையில், 'பந்த்'துக்கு எதிர்க்கட்சியினர் விடுத்த அழைப்பை,
மக்கள் சட்டை செய்யவில்லை. மாவட்டத்தில், ஐ.ஏ.எஸ்., மற்றும் போலீஸ் அதிகாரிகள்
முகாமிட்டு, இயல்பு நிலை திரும்ப, நடவடிக்கைகள் எடுத்தனர். இதனால், நேற்று முதல், வெளியூர் பஸ்கள் இயக்கம் துவங்கியது.
துாத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, மே, 22ல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதில், சமூக விரோதிகள் புகுந்து,
கலவரத்தை ஏற்படுத்தினர். கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் எரிக்கப்பட்டன. போலீசார் துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியாகினர்; 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

பிசுபிசுத்த, 'பந்த்'


துாத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத் தில், ஆரம்பத்தில் இருந்தே, தி.மு.க., - காங்., - கம்யூ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது, மக்கள் நம்பிக்கை இழந்தனர். கடந்த, 23ம் தேதி துாத்துக்குடி வந்த, தி.மு.க., செயல் தலைவர்
ஸ்டாலின், அரசு மருத்துவமனைக்குள் செல்ல முயன்ற போது, காயம் அடைந்தவர்களின் உறவினர்கள், அவரை முற்றுகையிட்டனர்.
'இதுவரை போராட்டத்திற்கு ஆதரவு அளிக்காமல், தற்போது வந்தது ஏன்?' எனக் கேட்டு, வாக்குவாதம் செய்தனர்.
அவருடன் வந்த கமாண்டோ படையினர், ஸ்டாலினை

மீட்டு சென்றனர். அப்போது ஸ்டாலினுடன் வந்த, எட்டு கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
துப்பாக்கிச் சூட்டுக்கு பின், கடைகள் திறக்கப் படாமல் இருந்ததால், அடிப்படை தேவை களுக்காக மக்கள், மூன்று நாட்களாக மிகுந்த சிரமப்பட்டனர். இதனால்,எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த, 'பந்த்' போராட்டத்தை புறக்கணித்தனர்.நான்காவது நாளான நேற்று, துாத்துக்குடியில் சிறிய கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டிருந்தன.

இலவச உணவு


அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முக்கிய
சாலைகளில்
போக்குவரத்து துவங்கியது. பழைய பஸ் ஸ்டாண்ட், காமராஜ் காய்கறி மார்க்கெட்,
துறைமுக சாலை அருகே உள்ள, வ.உ.சி., மார்க்கெட் ஆகிய இடங்களில், காய்கறி விற்பனை

நடந்தது. துாத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில், நோயாளிகளின் உறவினர்களின் தேவைக்காக, 'அம்மா' உணவகம் நேற்று திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்பட உள்ள உணவகத்தில், மூன்று நாட்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கப்படும்.
நேற்று அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில், கலெக்டர் சந்தீப் நந்துாரி ஆய்வு செய்தார். காயம் அடைந்தவர்களுக்கு உதவியாக, உடன் இருக்கும் உறவினர்களுக்கு குடிநீர், உணவு பொருட்கள் தடையின்றி கிடைக்க உத்தரவிட்டார்.அரசின் சிறப்பு பார்வையாளராக வந்துள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் டேவிதார், ககன்தீப்சிங் பேடி ஆகியோரும், நகரில் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று முகூர்த்த தினம் என்பதால், மண்டபங்களில் வழக்கம் போல, திருமண நிகழ்ச்சிகள் நடந்தன. ஆனால், உறவினர்கள் கூட்டம் இல்லை.

கூடுதல், டி.ஜி.பி., விஜயகுமார், ஐ.ஜி.,க்கள் சைலேஷ்குமார் யாதவ், வரதராஜ், சண்முக ராஜேஸ்வரன், கபில்குமார் சரத்கர், எஸ்.பி.,க்கள் முரளிரம்பா, அருண் சக்திகுமார் உள்ளிட்டோர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அண்ணா நகர், முத்தம்மாள் காலனி, பிரையன்ட் நகரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அண்ணாநகரில் தான் மே, 23ல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் என்பவர் பலியானார். அந்த பகுதி, ஆளில்லா உளவு விமானம் மூலம் கண்காணிக் கப்படுகிறது. 20 கம்பெனி கமாண்டோ படையினர், அதிரடிப் படையினர் ரோந்துப் பணியில் உள்ளனர்.
நெல்லை, மதுரை, திருச்செந்துார் உள்ளிட்ட இடங்களுக்கு, அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும், உள்ளூர் பஸ்கள் இயக்கப்பட வில்லை. துாத்துக்குடி, மெல்ல மெல்ல, இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

பாதிப்பில்லை


துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நேற்று, தமிழகம் முழுதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. சென்னையில்,
ஆங்காங்கே, கடைகள் அடைக்கப் பட்டிருந் தன.காலை நேரத்தில், அரசியல் கட்சியினரின் மறியல் காரணமாக, சென்னை, திருப்பூர், கோவை, கும்பகோணம், நெல்லை உள்ளிட்ட சில இடங்களில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைது செய்து, போக்குவரத்தை சரி செய்தனர்.
ஆட்டோக்களின் சேவை, 30 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. அதே நேரம், பஸ் போக்குவரத் தில் எந்த பாதிப்பும் இல்லை. ரயில்களும் வழக்கம் போல் இயங்கின. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை.


Advertisement

வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Mohan - London,யுனைடெட் கிங்டம்
26-மே-201822:05:17 IST Report Abuse

V MohanThis is very good and hats off to the public. They have destroyed the intimidation by the Christian missionaries, they are the main culprits in this total disaster using the foreign-influenced money. People have seen how this minority have d a huge mess in our social tem in the name of god and tematic attack on other beliefs in the state. Most of poor and vulnerable SC people have fallen as a prey to them and they manipulate this innocent person and turn them to violence. Why there is no arrest in the church and culprits who fired this issue. Now the factory will be closed temporarily and people who were working and earnings are affected this is good news for the missionaries coz more vulnerable people whom they can target.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
26-மே-201815:37:31 IST Report Abuse

Endrum Indianஇப்போ இங்கே போராட்ட வன்முறை ஓய்ந்து விட்டது இனி அடுத்து எந்த இடம் என்று கிறித்துவ சங்கங்கள் தீவிரமாக் ஆராய்ந்து வருகின்றது. அடுத்தது அவர்கள் தேர்ந்தேடுத்தது உத்தரப்பிரதேசமாக் இருக்கலாம்.

Rate this:
R Sanjay - Chennai,இந்தியா
26-மே-201815:30:31 IST Report Abuse

R Sanjayஅமைதி திரும்பலாம் அனால் தூத்துக்குடி சம்பவத்தால் ஏற்பட்ட வலிகள் என்றுமே மாறாது அணையா தனல் போல ஒவ்வொரு உண்மை தமிழனின் நெஞ்சில் எரிந்து கொண்டு தான் இருக்கும்

Rate this:
மேலும் 60 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X