'நான் வில்லேஜ் விஞ்ஞானி' : ஸ்ருதி| Dinamalar

'நான் வில்லேஜ் விஞ்ஞானி' : ஸ்ருதி

Added : மே 27, 2018
Advertisement
'நான் வில்லேஜ் விஞ்ஞானி' : ஸ்ருதி

உடலோ கறுப்பு நிறத்தால் அழகு, உதடோ ஈரங்காயாத இயற்கை சிவப்பழகி, செதுக்கி வச்ச தேர்போல விழிபிதுங்கும் பேரழகி. அன்னம் நடப்பது இவளை பார்த்தே; ஆகாய நிலவும் இவள் வார்ப்பே; பேசும் தமிழ் யாழோசை; வீசும் மணம் தாழம்பூ வாசம் என எல்லா ஆசையையும் பிசைந்து இறைவன் வார்த்த பெண் என கவிஞர்கள் பாடத்தகுதி பெற்றவர் ஸ்ருதி.

ஐ.டி., ஊழியரான இவர் எதிர்பாராது கிடைத்த மாடலிங் வாய்ப்பை இறுகப்பிடித்து நடித்ததால், இப்போ பிடித்த சினிமாவிலும் நடிக்க கிடைத்தது வாய்ப்பு. அங்கும் ஸ்ருதி ரொம்ப பிசி. ஸ்ருதி, இடைவேளையில் நம்மிடம் பேசியது:

* பிடித்த நடிகர்-நடிகைகள்; பிடித்த கேரக்டர்தீபிகா படுகோனே, நயன்தாரா, ரன்வீர், சித்தார்த் ரொம்ப பிடிக்கும். 'அருந்ததி' அனுஷ்கா, 'நானும் ரவுடி தான்' நயன்தாரா கேரக்டரில் நடிக்க ஆசை. ஆனா, அவங்க நடிச்சிட்டாங்களே. நமக்குன்னு ஒரு கேரக்டர் கிடைக்காமலா போயிடும்.

* மாடலிங் இஷ்டமாபி.டெக்., படிச்சிட்டு சென்னையில் ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கிறேன். அப்படியே வாய்ப்பு கிடைச்சது; மாடலிங் வந்துட்டேன். மாடலிங்னா அவ்ளோ பிரியம். நானும் மாடல் ஆவேன்னு நினைச்சுக்கூட பார்க்கல. என்னோட தோழி பேஷன் டிசைனர். அவளோட விருப்பத்தால் மாடலிங்கிற்கு வந்தேன். ஆறு மாசத்துலயே 7 முறை மிஸ் தமிழ்நாடு, சென்னைனு பரிசு வாங்கியிருக்கேன்.
* சினிமா வாய்ப்புநல்லாவே வருது. 2 படத்துல நடிக்க ஒப்பந்தமாகியிருக்கேன். 'டிவி' விளம்பரங்களில் நடிச்சிட்டு வர்றேன்.

* வேறென்ன தெரியும்கூடைப்பந்து விளையாடுவேன். பைக் ரேஸரும்தான். ரேஸ் பைக்கு கூட இருக்கு. நான் ரொம்ப தைரியமான பொண்ணு மட்டுமல்ல... போராளியும் கூட.

* போராளியா நீங்கநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், ஜல்லிக்கட்டுக்காகவெல்லாம் போராடியிருக்கேன்.

* பயமே கிடையாதா பயமா எனக்கா. துாள் சொர்ணாக்கா மாதிரி. காலேஜ் படிக்கும் போது, என்கிட்ட வாலாட்டின 2 பசங்கள அடிச்சி ஓட விட்ருக்கேன்னா பார்த்துக்கோங்க...

* எதிர்கால கனவுவிஞ்ஞானியாகணும்னு ரொம்ப நாள் கனவு. காலேஜ் படிக்கும் போது கொசு எதுனால உருவாகுது, அதுனால நமக்கு என்ன பயன், கெடுதல், எப்படி அதை அழிக்கலாம்னு புராஜெக்ட் பண்ணியிருக்கேன். அப்டின்னா... நானும் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி தானே.
* டிப்ஸ் ஏதாவதுஅந்த காலத்து பொண்ணுக மாதிரியில்லாம, தைரியமா, கெத்தா இருங்க. உங்க லட்சியத்தை நோக்கி ஓடுங்க. வெற்றி நிச்சயமா கிடைக்கும்.

இவரை வாழ்த்த suruthiperiyasamy@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X