நான் காங்.,குக்கே கடமைப்பட்டவன்; மக்களுக்கல்ல : குமாரசாமி| Dinamalar

நான் காங்.,குக்கே கடமைப்பட்டவன்; மக்களுக்கல்ல : குமாரசாமி

Added : மே 28, 2018 | கருத்துகள் (101)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 கர்நாடகா முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ், விவசாய கடன் தள்ளுபடி,  கர்நாடகா தேர்தல் வாக்குறுதி, பிரதமர் மோடி , குமாரசாமி ராஜினாமா , முதல்வர் குமாரசாமி,  குமாரசாமி, மதச்சார்பற்ற ஜனதா தளம், 
Karnataka Chief Minister kumaraswamy, Congress, Agricultural loan, Karnataka Election Promises, Prime Minister modi, kumarasamy resignation, Chief Minister kumaraswamy, Kumaraswamy, Secular Janata Dal,

பெங்களூரு : தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கர்நாடக விவசாயிகள் சார்பில் பெங்களூரு தவிர்த்து கர்நாடகாவின் மற்ற பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசுவதற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று டில்லி செல்கிறார். பிரதமருடனான சந்திப்பு காலை 11.30 மணிக்கு பதிலாக மாலை 5.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, கர்நாடக மக்கள் என்னையும், எனது கட்சியையும் புறக்கணித்தனர். தனி பெரும்பான்மை கிடைக்கும் என்று தான் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தேன். விவசாய சங்க தலைவர்களிடமும் இது பற்றி பேசினேன். அவர்கள் எந்த அளவிற்கு என்னை ஆதரித்தனர்.
இது சுதந்திரமான அரசு கிடையாது. இது தொடர்பாக காங்., தலைவர்கள் சிலருடன் பேசி உள்ளேன். நான் காங்.,குக்கு தான் கடமைப்பட்டவன். 6.5 கோடி கர்நாடக மக்களுக்கு அல்ல. விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் பேச்சுக்கே இடமில்லை. எனக்கு அதிக அழுத்தம் உள்ளதால், மக்கள் எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுக்க வேண்டும்.
மாநிலத்தின் நிதி நிலைமையை தெரிந்து கொண்டு, அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகு இது குறித்து முடிவு செய்வேன். ஒரு வாரத்திற்குள் விவசாய கடன் குறித்து முடிவு செய்வேன் இல்லாவிட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
28-மே-201819:28:41 IST Report Abuse
anbu தாலி பிச்சை போட்ட கணவனே கண்கண்ட தெய்வம்.
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
28-மே-201819:06:25 IST Report Abuse
வெகுளி குமாரசாமியின் இந்த நேர்மை நமக்கு புதுசு......
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
28-மே-201818:34:02 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM காங் முடிவாக , கறாராக சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்....இலாகா ஒதுக்கீட்டில் காங் முடிவுக்கு கட்டுப்படவில்லையென்றால், உங்கள் விருப்பம் போல செய்யுங்கள் என்று கு சாமிக்கு சொல்லியிருக்க கூடும்... அதனால் தான் ஒப்பாரி... காங் கொடுத்த முதல்வர் பதவி வேண்டாம் என்றால், தாராளமாக ராஜினாமா செய்துவிட்டு, பாஜக, துணை முதல்வர் பதவி கொடுத்தால் வாங்கிவிட்டு ஆட்சி அமைக்கட்டுமே .. எதுக்கு ஒப்பாரி ?
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
28-மே-201818:31:22 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM கூட்டணியில் ஆயிரம் குழப்பம் வந்தாலும் முதல்வராக பதவியேற்றவர் இப்படி கூறினால், மக்கள் இவரை இனி புறந்தள்ள வாய்ப்பு உள்ளது....அனுதாபம் இதில் கிடைக்க வாய்ப்பில்லை...
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
28-மே-201818:28:11 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM சரி சரி இப்போ ஒப்பாரி எதுக்கு ?.. காங் தானே பதவி கொடுத்தது ... சந்தோஷமாக மக்களுக்கு நல்லது செய்யவேண்டியது தானே ?.. உமக்கும் உங்க அப்பாவுக்கும் இன்னமும் பதவி ஆசை போகவில்லை... உங்க அப்பாவுக்கு அடுத்தது உம்மை பிரதமர் பதவியில் உட்கார வைக்கவும் ஆசை இருக்கும்... மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் இப்படி ஒப்பாரி வைக்கமாட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
28-மே-201818:02:49 IST Report Abuse
S.Baliah Seer உண்மையை குமாரசாமி பேசியிருக்கிறார். வாழ்த்துக்கள்.காங்கிரஸ் தயவு இல்லையேல் அவரால் முதல்வர் நாற்காலியில் நீடிக்க முடியாது. மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும்போது மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. குமாரசாமி அரசு விவசாயி கடன்களை தள்ளுபடி செய்யமுடியாது என்பதே உண்மை.
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
28-மே-201817:58:03 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) இவங்களோட கீழ்த்தரமான கூட்டணிக்கு முட்டுக்கு குடுத்த போராளீஸ் , உங்களை கொமாரு நல்லாவே வெச்சு செய்யுறாரு .
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
28-மே-201817:28:23 IST Report Abuse
Kuppuswamykesavan உங்க ஸ்டேட்மெண்ட் சூப்பரப்பு, சூப்பரோ சூப்பர். ஆமா, கா.கிக்கு மட்டும் சொம்பு தூக்கி, வாழ்க வளமுடன் அப்பு.
Rate this:
Share this comment
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
28-மே-201816:14:39 IST Report Abuse
ANANDAKANNAN K கர்நாடக குமாரசாமி அரசு மக்களால் தேர்தலில் தேர்தெடுக்க படவில்லை குறுக்குவழியில் காங்கிரஸ் கட்சியின் துணையோடு வந்தது நாட்டு மக்கள் அறிந்த செய்தி அப்படியிருக்க இப்படி நேரடியாக மக்களை மதிக்காமல் கருது சொல்வது இழப்புதானே கர்நாடக மக்களுக்கு. மேலும் ஒரு மாநிலத்தின் நிதி ஆதாரம் நன்றாக இருக்கும் நேரத்தில் அரசின் கொள்கை முடிவின்படி விவசாய மக்களின் வாங்கி கடனை சுதந்திரமாக தள்ளுபடி செய்யமுடியும் இதுவே உண்மை. திரு.குமாரசாமி எதற்கு டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டும். இவர் மேலும் கடனை தள்ளுபடி செய்ய தற்போது முடியாது என்றும் போதிய நிதி மாநிலத்தில் இல்லை மத்திய பாரதிய ஜனதா அரசும் நிதி ஒதுக்க மறுத்து நம்மை வஞ்சித்துவிட்டது என்று மக்களிடம் சோகமாக சொல்லி தன் மேல எந்த தவறும் இல்லை காங்கிரசும் பாரதிய ஜனதா கட்சியும் தான் கரணம் என்று தப்பித்துக்கொள்வர்
Rate this:
Share this comment
Raja Selvan - thiruvannamalai ,இந்தியா
28-மே-201821:12:38 IST Report Abuse
Raja Selvanஇதே மத்திய அரசுதான் உபி ல விவசாயீ கடனை தள்ளுபடி செய்தது ...அதே மாதிரி இங்கேயும் செய்யலாம் இல்லையா …....
Rate this:
Share this comment
Cancel
Thamilan - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
28-மே-201816:05:32 IST Report Abuse
Thamilan உண்மை ... மக்கள் இவரை தேர்ந்தெடுக்கவில்லை மாறாக காங்கிரஸ் தான் இவருக்கு முதல்வர் பதவி கொடுத்தது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை