குழந்தையை காப்பாற்றிய 'ஸ்பைடர்மேன்'| Dinamalar

குழந்தையை காப்பாற்றிய 'ஸ்பைடர்மேன்'

Updated : மே 29, 2018 | Added : மே 28, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பாரீஸ் : அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த சிறுவனை, 'ஸ்பைடர்மேன்' போல செயல்பட்டு காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு குவிகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ். இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், நான்கு வயதான சிறுவன் தவறி விழுந்து, பால்கனியை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தான். இதை கவனித்த, மாலி நாட்டைச் சேர்ந்த கசாமா என்ற அகதி இளைஞர், 'ஸ்பைடர்மேன்' போல, கீழிருந்து ஒவ்வொரு மாடியாக ஏறி, தொங்கிக்கொண்டிருந்த குழந்தையின் உயிரை காப்பாற்றினார்.
இதற்குப்பின் தான், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்பகுதி மக்கள், அந்த இளைஞரை பாராட்டினர். அந்நாட்டு அதிபரிடம் இருந்து அழைப்பு வந்தது. இச்சந்திப்பில், இளைஞரை பாராட்டிய அதிபர் இம்மானுவேல் மக்ரோன், அவருக்கு பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை வழங்கினார். தீயணைப்பு துறையில் வேலையும் வழங்கினார்.

குழந்தையை காப்பாற்றிய ஸ்பைடர்மேன்

கசாமா கூறுகையில், ''குழந்தை தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்ததும், சிறிதும் யோசிக்காமல், ஒவ்வொரு மாடியாக வேகமாக ஏறி, காப்பாற்றினேன்,'' என்றார். மத்திய தரைக்கடல் வழியாக படகில் அகதியாக வந்த இந்த இளைஞர் இன்று ஹீரோவாகியுள்ளார்.



Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arunagiri - Cuddalore,இந்தியா
30-மே-201811:43:12 IST Report Abuse
Arunagiri ரியல் ஹீரோ .. Vaazthukkal.
Rate this:
Share this comment
Cancel
Mano - Madurai,இந்தியா
29-மே-201819:58:33 IST Report Abuse
Mano This fellow is appreciated by whole nation and french president received him at 'Elysées' to congradulate.
Rate this:
Share this comment
Cancel
ramram - Pondicherry,பிரான்ஸ்
29-மே-201818:50:06 IST Report Abuse
ramram இதன் தொடர்ச்சியாக, குழ‌ந்தையை பொறுப்பு இல்லமால் தனியாக விட்டு செ‌ன்ற பெற்றோர் கைது செய்யப்பட்டார். குழந்தை அரசு பொறுப்பு ஏற்று கொண்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X