சட்டசபையில் கறுப்புச்சட்டையுடன் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் கறுப்புச்சட்டையுடன் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்

Updated : மே 29, 2018 | Added : மே 29, 2018 | கருத்துகள் (63)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Tuticorin firing,Tamil Nadu Assembly,DMK MLAs, அதிமுக, சட்டசபை, கறுப்பு சட்டை,  தூத்துக்குடி சம்பவம், திமுக எம்எல்ஏக்கள், தமிழக சட்டசபை, மானிய கோரிக்கைகள் விவாதம், தமிழக சட்டசபை கூட்டத்தொடர், குட்கா விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு , 
 Thoothukudi incident, TN Assembly,  Tamilnadu assembly session, Gudka affair,

சென்னை: தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சட்டசபையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கறுப்புச்சட்டையுடன் வந்தனர்.
தமிழக சட்டசபையில் மார்ச், 15ல், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம், மார்ச், 22 வரை நடந்தது.அதன்பின், மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி, துறை ரீதியான நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெற, இன்று காலை, 10:30 மணிக்கு, சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது. ஜூலை, 9 வரை நடைபெறுகிறது.




அமளி





கேள்விநேரம் முடிந்ததும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், இதனை ஏற்க மறுத்த சபாநாயகர், கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டிருப்பதால், ஒத்திவைப்பு தீர்மானம் தேவையில்லை என்றார்.

ஆனால், ஸ்டாலினை முதலில் பேச அனுமதிக்க வேண்டும் என திமுகவின் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்க சபாநாயகர் ஏற்க மறுத்ததை தொடர்ந்து, திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.



அறிக்கை:

இதனிடையே, தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் அறிக்கை தாக்கல் செய்தார்.

முன்னதாக, தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எம்.எல்.ஏ.,க்கள் சண்முகநாதன், தமிமூன் அன்சாரி, தினகரன் ஆகியோர் இன்று கொண்டு வந்தனர்.


இரங்கல்:



சட்டசபை துவங்கியதும், முன்னாள் எம்எல்ஏக்கள் 7 பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
29-மே-201821:01:05 IST Report Abuse
Matt P துரஐ முருகனுக்கு அவர் அளவுக்கு அவசரத்துக்கு கருப்பு சட்டை கிடைக்கவில்லை போலிருக்கு ...நீல சட்டைக்கு மேல் சின்னதா கருப்பு சட்டை அதுக்கு மேல ஒரு துண்டு ...இப்படியெல்லாம் வேஷம் போட வேண்டுமா?...
Rate this:
Share this comment
Cancel
Ramesh - chennai,இந்தியா
29-மே-201820:26:02 IST Report Abuse
Ramesh .கோடி கோடியாய் சொத்து தொழிசாலை,கல்லூரி வைத்திருப்பவர்களை தேர்தெடுத்தால் இது தான் நடக்கும்..
Rate this:
Share this comment
Cancel
V.Rajeswaran - chennai,இந்தியா
29-மே-201819:18:09 IST Report Abuse
V.Rajeswaran முதலில் கவர்னருக்கு கருப்பு கொடி, அப்புறம் பிரதமருக்கு கருப்பு கொடி இப்போ தனக்கே கருப்பு சட்டை இவங்க ஆட்சிக்கு வந்தா தமிழகத்து என்ன நாடாகும் என்பதை நாசுக்காக சொல்கிறார்கள் மக்களே புரிந்து கொள்ளவும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அது தமிழகத்து இருண்ட காலம்
Rate this:
Share this comment
Anand - chennai,இந்தியா
29-மே-201819:36:56 IST Report Abuse
Anand//இவங்க ஆட்சிக்கு வந்தா தமிழகத்து என்ன நாடாகும்// வேறென்ன "களப்பிரர்கள்" ஆட்சி தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X