சிதம்பரத்தை கைது செய்ய ஜூன் 5 வரை நீதிமன்றம் தடை Dinamalar
பதிவு செய்த நாள் :
சிதம்பரத்தை கைது செய்ய
ஜூன் 5 வரை நீதிமன்றம் தடை

புதுடில்லி,: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், ஜூன், 5 வரை, முன்னாள் நிதி அமைச்சரும், மூத்த காங்., தலைவருமான சிதம்பரத்தை, கைது செய்ய, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சிதம்பரத்தை ,கைது,செய்ய,ஜூன் 5, வரை, நீதிமன்றம்,தடை


சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தபோது, ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனத்துக்காக, வெளிநாட்டு முதலீடுக்கு

அனுமதி பெற்ற விவகாரத்தில், சிதம்பரத்தின்மகன் கார்த்தி, முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ் சாட்டப்பட்டது.இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக,சிதம்பரம் மகன் கார்த்தியை, ஜூலை, 10 வரை கைது செய்ய, சி.பி.ஐ., நீதிமன்றம், இடைக்கால தடை விதித்து உள்ளது.


இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, ஜூன் 5ல், நேரில் ஆஜராகும்படி, சிதம்பரத்துக்கு, அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.இதையடுத்து, அவர் முன் ஜாமின் கோரி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.


இந்த மனு, விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு , தொடர்பாக, அமலாக்கத் துறையினர், ஜூன், 5ல், விளக்கம்

Advertisement

அளிக்க வேண்டும் என நீதி மன்றம் உத்தர விட்டது. அதுவரை சிதம்பரத்தை கைது செய்யவும், நீதிமன்றம் தடை விதித்தது. இந் நிலையில், ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் முன் ஜாமின் கேட்டு, டில்லி உயர் நீதிமன்றத் தில், சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
31-மே-201818:27:33 IST Report Abuse

Kuppuswamykesavan- ஐயா, உங்க ஆதங்கம் புரிகிறது. எழைகளிடம், பணம் பதவி பவிசு பந்தா மற்றும் மேதாவிகள் இல்லைய?. மேலும் விழிப்புணர்வும், பொது அறிவும் மிக குறைவுதான் எனலாம்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
31-மே-201816:25:14 IST Report Abuse

Endrum Indianஇதுவே ஒரு சாதாரணன் என்றால் முதலில் கைது அதற்கு பிறகு தான் மத்த விஷயங்கள். அப்போ கோர்ட்டை நாம் மூடி விடலாம் ஏனென்றால் அவர்கள் வெறும் அரசியலவாதிகளுக்கும், பணக்காரர்களுக்கு, நடிக/நடிகையர்களுக்கு மட்டுமே வேலை செய்கின்றனர் சாதாரணர்களுக்கு அல்ல.

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
31-மே-201815:45:21 IST Report Abuse

தேச நேசன் முன்ஜாமீன் ஏ டி எம்மின் பாஸ்வேர்டு அவங்ககிட்டத்தான் இருக்கும் போல.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X