தேசிய கட்சிகளுக்கு ரூ.711 கோடி நன்கொடை Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
தேசிய கட்சிகளுக்கு ரூ.711 கோடி நன்கொடை

புதுடில்லி, :தேசிய கட்சிகளுக்கு, 2016 - 17ல், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து, 711 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்து உள்ளது.

  தேசிய,கட்சிகளுக்கு,ரூ.711 கோடி,நன்கொடை


ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம், நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கை விபரம்:பா.ஜ., - காங்., தேசியவாத காங்., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமுல் காங்., ஆகிய தேசிய கட்சிகளுக்கு,

2016 - 17 நிதியாண்டில், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து, 711 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துஉள்ளது.


பா.ஜ., - காங்.,



இதில், பா.ஜ., 465 கோடிரூபாய், காங்., 125 கோடி ரூபாய் பெற்று உள்ளன.திரிணமுல் காங்., 2016 - 17ல், 20 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக நன்கொடை பெறவில்லை என அறிவித்துள்ளது. கடந்த, 11 ஆண்டுகளாக அக்கட்சி, இதே அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.


ஏழு தேசிய கட்சிகள், 2016 - 17ல், அடையாளம் தெரிந்த நபர் அல்லது அமைப்பு களிடம் இருந்து பெற்ற நன்கொடை, 589 கோடி ரூபாய். சொத்து விற்றல், உறுப்பினர் கட்டணம், வங்கி வட்டி

Advertisement

உள்ளிட்ட பிற வகைகளில், தேசிய கட்சிகள், 259 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளன. சத்யா தேர்தல் அறக்கட்டளை, பா.ஜ.,வுக்கு, 251கோடி ரூபாய், காங்.,கிற்கு, 13.90 கோடி ரூபாய், நன்கொடை தந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள், 708 நன்கொடைகள் மூலம், 563 கோடி ரூபாயை, தேசிய கட்சிகளுக்கு அளித்து உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பொன் வண்ணன் - chennai,இந்தியா
31-மே-201818:01:31 IST Report Abuse

பொன் வண்ணன் ஏண்டா..தங்கள் வாழ வேண்டும் என்று சுய அடையாளத்தோடு நேரே களத்தில் இறங்கி போராடுபவன் தீவிரவாதி...அடையாளம் தெரியாமல் இந்த தேச விரோத கட்சிகளுக்கு நன் கொடை கொடுப்பவன் தேச பக்தனா..

Rate this:
L ANTONY AMAL RAJ - chennai,இந்தியா
31-மே-201816:42:41 IST Report Abuse

L ANTONY AMAL RAJமக்கள் ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் எத்தனையோபேர் உள்ளனர்.கட்சிகளுக்கு நிதி கொடுக்கும் அடையாளம் தெரியாதோர்க்கு இதயத்தில் ஈரம் இருந்தால் இவர்களுக்காக ஏதாவது செய்யட்டும் .இல்லையெனில் கடவுளின் தீர்ப்பில் ஒவ்வொரு கருப்பு பக்கமும் இவர்களுக்கென காத்திருக்கிறது . வாழும் வரை ஆணவத்தில் ஆடுங்கள் .

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
31-மே-201811:09:41 IST Report Abuse

நக்கீரன்கார்போரேட்டுகளுக்கு ஏன் இந்த அரசியல்வாதி வியாதிகள் வாலை இந்த அளவுக்கு ஆட்டுகின்றன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் கட்சி மூலம் சொத்து சேர்த்து வசதியாக வாழ்வதற்கு ஒட்டு மொத்த மக்களும் கஷ்டப்பட வேண்டுமா? இந்த கட்சிகள் இப்படி கோடிக்கணக்கில் நன்கொடை பெறுவதே எல்லா லஞ்ச ஊழல்களுக்கும் ஒரு காரணம். நன்கொடை கொடுக்கப்படும் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் தங்கள் இஷ்டப்படி ஆடுவதற்கு கார்ப்பரேட்களால் கொடுக்கப்படும் இதுவும் ஒருவகையில் மறைமுக லஞ்சமே. சட்ட விரோதமே. இதை எப்படி இந்த இந்திய ஜனநாயகமும், சட்டமும் அனுமதிக்கிறது? லஞ்சம், ஊழல் என்று கூவுபவர்கள் முதலில் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X