chennai | பாசப்பறவைகள்..| Dinamalar

பாசப்பறவைகள்..

Updated : ஜூன் 01, 2018 | Added : ஜூன் 01, 2018
Advertisement


சகலவிதமான சந்தடிகளும் நிறைந்த சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே உள்ள பாரதி சாலையின் நடுவில் உள்ள ஒரு மாடியில்தான் அந்த ஆச்சரியம் அன்றாடம் ஒரு முறைக்கு இரு முறை அரங்கேறுகிறது.

இத்தனை கிளிகள் எங்கு இருக்கிறது எப்படி காலையிலும் மாலையிலும் உணவு வைப்பதை தெரிந்து இங்கு வந்து கூடுகிறது என்பது ஒரு ஆச்சரியமான விஷயமே.

கிளிகளுக்கு உணவு வைக்கும் சேகரைப்பற்றி நிஜக்கதையில் விரிவாக சொல்லியிருக்கிறேன் (http://www.dinamalar.com/news_detail.asp?id=2029632)

இங்கே நான் படம் பிடித்துக் காட்டவந்தது பச்சைப் போர்வை போர்த்தியது போல கூடிநிற்கும் அந்த கிளிகள் தங்களுக்குள் பாசத்துடன் ஊட்டிவிட்டுக்கொள்வதும், போட்டியிட்டு சாப்பிடுவதும்,கோபம் காட்டுவதும், சண்டையிட்டுக் கொள்வதும்,பின் சமாதானம் ஆவதும், சாப்பிட்டு முடிந்ததும் வயரில் தலைகீழாக உற்சாகமாக ஆடுவதுமான அவைகளின் சந்தோஷ உலகத்தைத்தான்

வெயில் மழை காற்று என்று வருடத்தில் எந்த சீசனிலும் காணக்கூடிய ஆனால் காணக்கிடைக்காத இந்த காட்சியை வாய்ப்பு வரும்போது ஒவ்வொருவரும் பார்த்து மகிழவேண்டும்.போவதற்கு முன் சேகருக்கு போன் செய்துவிட்டு செல்லுங்கள் அதுதான் முறை அவரது எண்:7338866007.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in





Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X